பரங்கிமலை கொலை: பிஇ சாமியார் கைது
சென்னை:சென்னை பரங்கிமலை உச்சியில் உள்ள புனித தோமையர் பேராலய வளாகத்தில் உள்ள புத்தக நிலையமேலாளரைக் கொன்ற வழக்கில் கல்கி அவதாரம் என்று தன்னைக் கூறிக் கொண்ட பொறியியல் பட்டதாரியைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பரங்கிமலை உச்சியில் புனித தோமையர் பேராலயம் உள்ளது. இயேசுவின் சீடரான புனித தோமையர்இங்கு அமர்ந்துதான் இயேசு நாதரின் போதனைகளை போதித்தார் என்று கூறப்படுகிறது.
இந்த பேராலய வளாகத்தில் புத்தக விற்பனை நிலையம் உள்ளது. இங்கு மேலாளராகப் பணியாற்றி வந்தவர்ஜேக்கப். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார்.
இவரை ஒரு நபர் கத்தியால் குத்திக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்டார். அந்த மர்ம நபரை போலீஸார் வலைவீசித் தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை நடந்த 19 மணி நேரத்தில் அந்த நபர் பிடிபட்டுள்ளார்.
ஜேக்கப்பைக் கொன்ற நபரின் பெயர் ரமேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. நீண்ட தலைமுடி, முகம் நிறையதாடியுன் காணப்படும் 37 வயது ரமேஷ்பாபு, ஆதம்பாக்கம் பகுதியில் வைத்து போலீஸாரிடம் பிடிபட்டார்.
ஜேக்கப்பைக் கொன்று விட்டு தப்பி ஓடிய ரமேஷ்பாபு, ஆதம்பாக்கம் வந்துள்ளார். அங்கு சாலையில் போகிறவருகிறவர்களையெல்லாம் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார்அங்கு விரைந்து ரமேஷ் பாபுவைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்தான் ஜேக்கப்பைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து பரங்கிமலை போலீஸாருக்குத்தகவல் பறந்தது. இதையடுத்து ரமேஷ்பாபுவை பரங்கிமலை காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்துவிசாரித்தனர்.
விசாரணையில் ரமேஷ்பாபு தெரிவித்த தகவல்கள்:
நான் ஆதம்பாக்கம் நியூ காலனியைச் சேர்ந்தவன். எனது தந்தை பெயர் முத்துவேல். ரயில்வேயில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். எனது தாயார் சாந்தி, வாணியம்பாடியில் உள்ள எனது சகோதரி வீட்டுக்குச்சென்றுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. முடித்துள்ளேன். தங்கப் பதக்கம் வாங்கியுள்ளேன். எனக்கு கடவுள் பக்திஅதிகம். சிறு வயது முதலே கடவுள் மீது அதிக பக்தி வைத்திருந்தேன். இதனால் எனது மனைவி என்னுடன் வாழமுடியாமல் ஒரே மாதத்தில் பிரிந்து போய் விட்டார்.
கோவையில் உள்ள மகரிஷி ஆசிரமத்தில் யோகா பயிற்சி செய்து வந்தேன். ஆண்டுதோறும் மகாமுனிவர்பிருங்கி வசித்து வந்த பரங்கிமலையில் தீபம் ஏற்றி வழிபட முயற்சிப்பேன். ஆனால் அனுமதிக்க மறுத்தார்கள்.
இந்துக்களுக்குச் சொந்தமான மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்க மறுப்பதா என எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.இந்த வருடம் கட்டாயம் கார்த்திகை மாதத்தில் பரங்கிமலையில் தீபம் ஏற்றி வழிபட உறுதி பூண்டேன்.
தீபம் ஏற்ற மலையைக் கொடுக்குமாறு கூறி பாதிரியாரிடம் கேட்கச் சென்றேன். ஆனால் பாதிரியார் இல்லை.இதனால் புத்தக நிலைய மேலாளரிடம் போய் பேசினேன். அவர் என்னைத் திட்டினார். இதனால் எங்களுக்குள்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவரைக் கத்தியால் குத்தி விட்டு ஓடினேன் என்றார் ரமேஷ்பாபு.
தான் கல்கி பகவானின் அவதாரம் என்றும் போலீஸாரிடம் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்ரமேஷ்பாபு. அவரிடம் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளில் கல்கி பகவான் மெய்நெறி சநாதன தர்மஸ்தாபனம் என்ற ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. கத்தியிலும் அதே ஸ்டிக்கர் உள்ளது.
ரமேஷ்பாபு பிரான்ஸ் நாட்டில நல்ல வேலையில் இருந்தவராம். அங்கு பெரிய அளவில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தாராம். 2004ம் ஆண்டுதான் அவர் சென்னை திரும்பியுள்ளார். கடவுள் பக்தி முற்றிப் போனதால்இவ்வாறு கொலையைச் செய்து மாட்டியுள்ளார் ரமேஷ்பாபு.
அவரிடமிருந்து 6 பட்டாக் கத்திகள், கோடாரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் இருந்தது தெரிய வந்தது.இவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பரங்கிமலை சர்ச்சுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என சென்னைமாநகர கூடுதல் ஆணையர் ஜாங்கிட் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications