சுனாமி நிவாரணம்-தமிழகம் வரும் கிளிண்டன்
சென்னை:சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளைப் பார்வையிட முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்வருகிற டிசம்பர் 1ம் தேதி தமிழகம் வருகிறார்.
கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலைகள் தாக்குதலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பெரும் உயிர்சேதத்தையும், பொருட் சேதத்தையும் சந்தித்தன. குறிப்பாக கடலூர் மாவட்டம் மிகப் பெரிய சேதத்தை சந்தித்தது.
சுனாமியால் கடும் பாதிப்பை கண்ட இன்னொரு மாவட்டமான நாகைக்கு கடந்த ஆண்டு மே மாதம் கிளிண்டன்வருகை தந்தார். சுனாமி சீரமைப்புப் பணிகளுக்கான ஐ.நா. சிறப்புத் தூதராக அவர் வந்திருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 1ம் தேதி வருகை தருகிறார். கடலூர் வரும்கிளிண்டன் அங்கிருந்து தாழங்குடா கிராமத்திற்கு செல்கிறார். அங்கு சுனாமி தாக்குதலில் மீண்டு தற்காலிககுடியிருப்புகளில் வசிப்போரை அவர் சந்தித்து உரையாடுகிறார்.
மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளையும் அவர் சந்திக்கிறார். இந்தக் குழந்தைகளுக்குயுனிசெப் நிறுவனம் மன ரீதியான சிகிச்சை மற்றும் உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மணி நேரம் இங்கு கிளிண்டன் இருப்பார். அப்போது அவரை சுனாமியால் பெற்றோர்கள்,குடும்பத்தினரை இழந்த 480 குழந்தைகளும், கணவர்களை இழந்த 787 பெண்களும் கிளிண்டனை சந்தித்துப்பேசுவார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications