கண்டெய்னர்களில் வசிக்கும் துபாய் இந்தியர்கள்
துபாய்:துபாயில் வேலை பார்க்கும் இந்தியர்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள்,சரக்குகளை அடைக்கும் கண்டெய்னர்களில் வசிக்கும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
துபாயின் அல் அவிர் என்ற இடத்தில் உள்ள இரண்டு தொழிலாளர்கள் முகாம்களில்தான் இந்தக் கொடுமை.துபாயைச் சேர்ந்த அரேபியா என்ற மாலை நாளிதழ்தான் இதுகுறித்த செய்தியை பிரசுரித்துள்ளது.
தொழிலாளர்கள் தங்கும் முகாமில் இந்த கண்டெய்னர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு கண்டெய்னரில் 16தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கண்டெய்னரில் படுக்கைகள் போடப்பட்டுள்ளன. இதுபோலமொத்தம் 100 கண்டெய்னர்கள் அங்கு உள்ளனவாம்.
ஒவ்வொரு கண்டெய்னரும் 40 அடி நீளம் கொண்டவை. ஒவ்வொரு தொழிலாளருக்கும் தனித் தனி அறையும்உள்ளது. அதாவது மரத் தடுப்புகளால் ஆன அறைகள் அவை. இந்த கண்டெய்னர்களில் சிறிய டேபிள்,பானைகள், ஒரு பாத்திரங்கள், ஒரு கண்டெய்னருக்கு ஒரு டிவி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கண்டெய்னர் அறையிலும் ஒரு எக்சாஸ்டர் விசிறியும், குளிர்சாதன வசதியும் உள்ளது. 3கண்டெய்னர்களுக்கு ஒரு தீயணைப்புக் கருவியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கழிவறை, குளியலறை வசதியும் உண்டு. நோய் வாய்ப்பட்டவர்கள் மட்டும் தங்க தனியாக ஒருகண்டெய்னரும் உள்ளது.
24 மணி நேரம் இயங்கும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் டாங்கர் லாரிகள்மூலம் கொண்டு வந்து விநியோகிக்கப்படுகிறதாம்.
இந்க கண்டெய்னர் தங்குமிடம் உள்ள பகுதி முழுவதும் வேலி போட்டு கடுமையான பாதுகாப்பின் கீழ் உள்ளது.நேபாளத்தைச் சேர்ந்த கூர்க்காக்கள்தான் இங்கு பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தகண்டெய்னர்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை இல்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. தங்களுக்கு தனியாகவிடுதி கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அது முடியும் வரை இங்கு தங்கியுள்ளதாகவும் அந்த அப்பாவித்தொழிலாளர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.
சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டில் பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் அவல நிலையைஅமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மனித உரிமை அமைப்பு விரிவாக வெளிப்படுத்தியிருந்தது.
பில்டிங் டவர்ஸ், சீட்டிங் ஒர்க்கர்ஸ் என்ற பெயரிலான அந்தக் கட்டுரையில், அரபு எமிரேட்டில் வேலை பார்க்கும்கட்டுமானத் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் கசக்கிப் பிழியப்படுகிறார்கள் என்பது விரிவாகதெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கண்டெய்னர்களில் தொழிலாளர்களை தங்க வைத்துள்ள கொடுமை அதிர்ச்சியூட்டும் வகையில்உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications