ட்யூஷனில் ஆபாசம்-மாணவிகள் புகார்
சென்னை:செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் இரவு 9 மணி வரை ட்யூஷன் வகுப்புகள்நடத்தப்படுவதாகவும், அப்போது ஆசிரியர்கள் மாணவிகளிடம் ஆபாசமாகபேசுவதாகவும் மாணவர்கள் குறை தீர்ப்புப் பிரிவுக்கு புகார் வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்களால் ஏற்படும்தொல்லைகள் குறித்து புகார் செய்ய குறை தீர்ப்புப் பிரிவை தமிழக அரசு புதிதாகஆரம்பித்துள்ளது. இதன் பொறுப்பாளராக பள்ளிக் கல்வி இணை இயக்குனர்ராஜராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாணவ, மாணவியர் தங்களது குறைகளை இந்தப் பிரிவுடன் தொடர்பு கொண்டுதொலைபேசியிலோ (எண் 044-28273591), நேரிலோ அல்லது தபால் மூலமோபுகார் தரலாம்.
நேற்று முதல் இப்பிரிவு செயல்படத் தொடங்கியுள்ளது. 2 நாட்களிலேயே 16 புகார்கள்வந்துள்ளன. பெரும்பாலானவை ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது, சரியானநேரத்திற்கு வகுப்புகளுக்கு வருவதில்லை, பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிசரியாக இல்லை என்பது உள்ளிட்ட புகார்கள்தான் வந்துள்ளன.
செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடம் குறித்து மட்டும் மட்டமான புகார்வந்துள்ளது. இங்கு தினமும் இரவு 9 மணி வரை வகுப்புகள் வைப்பதாகவும், இரவுநேரத்தில் நடக்கும் டியூஷன் வகுப்பின்போது ஆசிரியர்கள், மாணவிகளிடம்ஆபாசமாக பேசுவதாகவும் புகார் வந்துள்ளது.
இந்தப் புகார்களை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனராஜராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications