மும்பை குண்டு வழக்கு: சஞ்சய் தத் குற்றவாளி
![]() |
மும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்தி நடிகர் சஞ்சய் தத் குற்றவாளி எனமும்பை தடா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
1993ம் ஆண்டு மும்பை நகரில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில்நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வழக்குதொடரப்பட்டது. அதில் சஞ்சய் தத்தும் ஒருவர்.
ஏ.கே.56 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நீண்ட காலத்திற்குப்பிறகு தற்போது படிப்படிாயக தீர்ப்பு வெளியாகி வருகிறது.
இன்று சஞ்சய் தத் மீதான குற்றச்சாட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பையொட்டி சஞ்சய் தத் தனதுகுடும்பத்தினர், திரையுலகினர் புடை சூழ தடா நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார். சஞ்சய் தத் தொடர்பானவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 7 பேரும் வந்திருந்தனர்.
பின்னர் நீதிபதி கோடே தனது தீர்ப்பை அறிவித்தார். சஞ்சய் தத் மீதான சதி வழக்கிலிருந்து அவரைவிடுவிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால், சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அவர்குற்றவாளி என பரபரப்பு தீர்ப்பளித்தார். தண்டனை குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதிஅறிவித்தார்.
தீர்ப்பைக் கேட்டவுடன் சஞ்சய் தத் கண்கள் கலங்கிக் காணப்பட்டார். அவரை குடும்பத்தினர் ஆறுதல் படுத்தினர்.பின்னர் அங்கிருந்து சஞ்சய் தத் வெளியேறினார்.
இதன்மூலம் மும்பை குண்டு வெடிப்பு சதியில் சஞ்சய் தத்துக்கு தொடர்பில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக அவருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனைதரப்படலாம். ஆனால், ஏற்கனவே 18 மாதங்கள் அவர் சிறையில் இருந்துவிட்டதால் மொத்த தண்டனைக்காலத்தில் 18 மாதங்கள் கழிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சஞ்சய்தத் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து மும்பையில் பரபரப்பு நிலவுகிறது. மும்பைதொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 86 பேர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications