தெ.ஆப்பிரிக்கா-இந்தியா இன்று மீண்டும் மோதல்
போர்ட் எலிசபெத்:தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் இந்தியா இன்று மோதுகிறது.இப்போட்டியிலும், அடுத்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற வேண்டும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள்பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணியுடனான முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் (ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுவிட்டது) 2 போட்டிகளில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் இன்று நான்காவது ஒரு நாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடைபெறுகிறது.இப்போட்டியில் கேப்டன் டிராவிட் காயம் காரணமாக இடம் பெற மாட்டார். அவருக்குப் பதில் ஷேவாக்கேப்டனாக பணியாற்றூவர்.
டிராவிடுக்குப் பதில் அணியில் சேர்க்கப்பட்டுள்ள வி.வி.எஸ்.லட்சுமண் இன்றுதான் தென் ஆப்பிரிக்கா போய்ச்சேருவார் என்பதால் இப்போட்டியில் அவர் இடம்பெற மாட்டார். கடைசி ஒரு நாள் போட்டியில்தான் அவரால்ஆட முடியும்.
இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றால் தொடரைக் கைப்பற்றி விடும். எனவே இன்றையபோட்டியில் எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
அணியின் முன்னணி வீரர்கள் தங்களது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் எனபயிற்சியாளர் சேப்பல் கண்டிப்பாக கூறியுள்ளார். எனவே கேப்டன் ஷேவாக், சச்சின் டெண்டுல்கர், முகம்மதுகைப், டோணி, சுரேஷ் ரெய்னா போன்றோர் பொறுப்போடு ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளனர்.
கேப்டன் டிராவிட் அணியில் இல்லாதது பெரும் பலவீனமாக இருக்கும் என கருதப்படுகிறது. டிராவிட் இருந்துமேகூட கடந்த 2 போட்டிகளிலும் இந்தியா படு மோசமான தோல்வியை சந்தித்தது. எனவே இன்றைய போட்டியில்வெற்றி பெற இந்தியா கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
மறுபுறம் தென்னாப்பிரிக்க அணி படு தெம்பாக காணப்படுகிறது. இன்றைய போட்டியில் வென்று தொடரைவெல்ல அந்த அணி மும்முரமாக உள்ளது.












Click it and Unblock the Notifications