பிபிசி தலைவரான மதுரை டாக்டர் சித்ரா
லண்டன்:பிபிசி தொலைக்காட்சி மற்றும் வானொலியின் தாற்காலிக தலைவராக மதுரையில் பிறந்து வளர்ந்த டாக்டர் சித்ராபரூச்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பிபிசியின் தலைவராக இருந்த மைக்கேல் கிரேட் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டிடிவி நிறுவனமான பிரிட்டனின் ஐடிவியில் இணைந்துவிட்டார். சமீபகாலமாக தடுமாற்றத்தில் இருந்து வரும்பிபிசிக்கு இது பெரிய அடியாகக் கருதப்படுகிறது.
இந் நிலையில் இந்தப் பதவிக்கு மிகச் சிறந்த நபரைத் தேடும் பணியில் பிபிசியும் பிரிட்டிஷ் அரசும் இறங்கின.பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் சித்ராவின் நியமனம் இறுதி செய்யப்பட்டது.
சித்ராவின் நியமனத்துக்கு பிரிட்டிஷ் அரசும் பிபிசியும் அனுமதி தந்துவிட்டன. ஜனவரி முதல் இந்த பொறுப்புக்குவருவார் சித்ரா. தாற்காலிகமாக இந்தப் பதவியில் நியமிக்கப்படும் சித்ரா, புதிய தலைவர் தேர்வு செய்யப்படும்வரை பிபிசியை வழி நடத்துவார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நேயர்களைக் கொண்ட பிபிசி தொலைக்காட்சிக்கும் வானொலிக்கும்தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண் சித்ரா தான் என்பது குறிப்பிடத்தக்கது. 4 பில்லியன் பட்ஜெட் கொண்டபிபிசிக்கு உலகம் முழுவதும் 26,000 நிருபர்களும் கேமராமேன்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும்ஊழியர்களும் உள்ளனர்.
மதுரையில் பிறந்த சித்ரா, 1972ல் பிரிட்டனில் குடியேறினார். இரத்தம் தொடர்பான ஆராயச்சிகளில் ஈடுபட்டமிகச் சிறந்த இரத்தவியல் நிபுணரான சித்ராஸ வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் மருத்துவமனையில் ரத்தமாற்றுப் பிரிவில் பணியாற்றினார்.
1996ல் தனது மருத்துவப் பணியில் இருந்து செய்தித் தொடர்பு துறை பக்கம் கவனத்தைத் திருப்பினார் சித்ரா.பிபிசியின் வடக்கு அயர்லாந்து பிரிவில் 2003ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
இப்போது பிரிட்டனின் பொது மருத்துவக் கவுன்சிலின் ஒரு பிரிவின் தலைவராக உள்ளார். 2001ம் ஆண்டு முதல்2003ம் ஆண்டு வரை வடக்கு அயர்லாந்தின் டெலிவிஷன் கமிஷன் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications