இலங்கைக்கு ராணுவ உதவி கிடையாது: இந்தியா
டெல்லி:இலங்கை இனப் பிரச்சினை தீர விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காணவேண்டும். இதுதொடர்பாக இந்தியாவிடமிருந்து ராணுவ உதவியை எதிர்பார்க்க வேண்டாம் என இலங்கைஅதிபர் ராஜபக்ஷேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ராஜபக்ஷே நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போதுஇலங்கை இனப் பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மன்மோகன் சிங்கிடம், ராணுவ ரீதியிலான உதவியை ராஜபக்ஷே கேட்டதாக தெரிகிறது. மேலும், இலங்கைஇனப் பிரச்சினை தொடர்பாக தற்போது இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர்விளக்கியுள்ளார்.
தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக விவாதித்து வருவதாகவும், விரைவில் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டி இது இறுதி செய்யப்படும் எனவும், டிசம்பர் மாத மத்தியில் அதிகாரப் பகிர்வுத் திட்டம்தயாராக விடும் எனவும் சிங்கிடம் ராஜபக்ஷே விளக்கினார்.
தமிழர் பிரச்சினை தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் ராஜபக்ஷே பேசியபோது, ராணுவ உதவி குறித்தே அதிகம்பேசியுள்ளார். ஆனால் இந்தியாவிடமிருந்து ராணுவ உதவியை எதிர்பார்க்க வேண்டாம், பேச்சுவார்த்தைகள்மூலமாக அரசியல் தீர்வு காண இலங்கை அரசு தீவிரமாக முயல வேண்டும் என்பதை ராஜபக்ஷேவிடம்மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல கூட்டு ரோந்து குறித்த இலங்கையின் கோரிக்கை குறித்தும் பேச்சுவார்த்தையில் முக்கியமாகவிவாதிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
பிரதமர், ராஜபக்ஷே சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறுகையில்,இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் முக்கியமாக விவாதித்தனர். அதுதவிர இரு தரப்புவிவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகளை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.இலங்கை அமைதிப் பிரச்சினையைப் பொருத்தவரை அமைதியான, அரசியல் தீர்வையே இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்தி வருவதை அதிபரிடம், பிரதமர் எடுத்துரைத்தார்.
இலங்கையில் உள்ள அனைத்து இனத்தினரும் அமைதியான சூழலில் ஒருங்கிணைந்து வாழ அரசியல் தீர்வேசரியானது என்பதை பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிரச்சினையின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக பிரதமர், அதிபர்இடையே நடந்த விவரங்களை முழுமையாக வெளியிட இயலாது.
இந்த சந்திப்பின்போது புதிதாக எந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றார் சர்னா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications