மூணாவது வாட்டியும் இந்தியா படுதோல்வி
போர்ட் எலிசபெத்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா படுதோல்வி அடைந்து தொடரைபறிகொடுத்தது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடகில் தற்போதுஆடி வருகிறது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது (நல்லவேளை !). 2வது ஆட்டத்தில் மிகப் பெரியதோல்வியை சந்தித்தது இந்தியா. இதனால் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
3வது போட்டியிலும் இந்தியாவுக்கு பெரும் தோல்வி கிடைத்தது. இந்த நிலையில் போர்ட் எலிசபெத் நகரில்நேற்று 4வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் சந்தித்தன. இதில் வெற்றி பெற்றால்தென் ஆப்பிரிக்கா தொடரை வென்று விடும் என்ற நிலை இருந்ததால் எப்படியாவது அதை இந்தியா தடுக்கமுயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
வழக்கம் போல டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களானகேப்டன் ஸ்மித்தும், போஸ்னும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்திய அணிக்கு தெம்பு பிறந்தது. பந்து வீச்சில்ஆக்ரோஷத்தைக் காட்டி தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பதம் பார்க்கத்தொடங்கினர்.
முதல் இரு விக்கெட்டுகளையும் ஸ்ரீசாந்த்தும், ஜாகிர்கானும் வீழ்த்தினர். 3வது விக்கெட்டாக அணியின் தூணானகல்லிஸ் 49 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார். அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள கும்பளே கல்லிஸைபெவிலியனுக்கு அனுப்பினார்.
முன்னணி வீரர்கள் ஒருபக்கம் அடுத்தடுத்து ஆட்டமிழந்தபோதிலும், கிப்ஸ் நிலைத்து ஆடி பொறுமையாகரன்களை சேர்த்து வந்தார். ரன் குவிப்பாளரான டிவில்லியர்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். போன போட்டியில்சதம் போட்ட கெம்ப் இந்த முறை டக் அவுட் ஆகி வெளியேறினார்.
விக்கெட்டுகள் மளமளவென சரிந்தபோதிலும் கிப்ஸ் மிகப் பொறுப்பாக ஆடி ரன்களை குவித்தார். அவருக்குத்துணையாக பந்துவீச்சாளர் போலக் சிறப்பாக ஆடி 37 ரன்களை சேர்த்து அவுட் ஆனார். பெளச்சர் 29 ரன்கள்சேர்த்தார்.
கிப்ஸ் ஆட்டமிழக்காமல் இறுதி வரை நின்று அடி 93 ரன்களை எடுத்து அணி கெளரவமான ஸ்கோரை எட்டஉதவினார். 50வது ஓவரின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்களைஎடுத்தது.
கும்ப்ளே 2 விக்கெட்டுகளையும், ஜாகிர்கான், ஸ்ரீசாந்த், ஷேவாக், டெண்டுல்கர் ஆகியோர் தலா ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர். அகர்கரும், பதானும் பந்து வீசியதோடு சரி, ஒரு விக்கெட்டையும் எடுக்காமல்ஏமாற்றினர்.
243 ரன்கள் என்பது எளிதான இலக்குதான். ஆனால் இந்தியாவுக்கு அது சிரமமாச்சே! தொடக்க ஆட்டக்காரர்கள்படு சொதப்பலாக ஆடி இந்திய ரசிகர்களின் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டி சொற்ப ரன்களில் அவுட்ஆகினர்.
வாசிம் ஜாபர் 10, டெண்டுல்கர் 1 ரன், ஷேவாக் 18 ரன்கள் என அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் வீழவே,இந்தியாவின் தோல்வி உறுதியானது. 10 ஓவர்களிலேயே இந்தியா 3 விக்கெட்டுகழை இழந்து 38 ரன்கள்மட்டுமே எடுத்தது.
ரன் குவிக்கத் தடுமாறிய இந்திய அணியால் 38.1 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களை மட்டுமே சேர்த்து 80 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியைத்தழுவியது இந்தியா.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் தொடரில் 3 போட்டிகளை வென்று தொடரைவென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications