கோவை கல்லூரிக்குள் புகுந்த காட்டு யானைகள்
கோவை:கோவை அருகே பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் காட்டு யானைகளால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
கோவை அருகே உள்ளது பேரூர் பச்சபாளையம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இந்த ஊர் உள்ளது.வனப்பகுதி என்பதால் காட்டுக்குள்ளிருந்து யானைகள், பன்றிகள் அடிக்கடி கூட்டம் கூட்டமாக ஊருக்குள்அவ்வப்போது ஊடுறுவி விடும்.
2 நாட்களுக்கு முன்பு 2 குட்டி யானைகளும், 6 பெரிய யானைகளும் கூட்டமாக ஊருக்குள் ஊடுறுவின.அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் யானைகள் புகுந்தன. இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது.
கல்லூரிக்கு முன்பாக 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சோளப் பயிர்களை யானைகள் துவம்சம் செய்துமுற்றிலுமாக அழித்து விட்டன. பின்னர் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த யானைகள் இஷ்டத்திற்கு அங்கும்இங்குமாக திரியத் தொடங்கின. யானைகள் வந்ததைப் பார்த்த மாணவர்கள் அங்கிருந்து ஓடினர்.
பின்னர் சோளக் காட்டுக்குள் புகுந்து சோளப் பயிர்களை வயிறு முட்ட சாப்பிட்டன. இப்படியாக சோளத்தைசாப்பிடுவதும், கல்லூரி மைதானத்திற்குள் வருவதுமாக இருந்ததால், யானைகளை விரட்ட வனத்துறையினருக்குதகவல் போனது.
வனத்துறையினரும் துப்பாக்கிகளுடன் வந்து யானைகளை விரட்டிப் பார்த்தனர். ஆனால் அவை போவது போலஇல்லை. பட்டாசுகளை வெடித்தும், தாரை தப்படைகளை முழங்கியும் கூட அவை அசராமல் அங்கும் இங்கும்ஓடிக் கொண்டிருந்தன.
யானைகள் அட்டகாசத்தால் நேற்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து யானைகள் இடத்தைக் காலிசெய்யாமல் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதால் கிராம மக்களும் பீதியடைந்துள்ளனர்.
வழக்கமாக காட்டு யானைகள் பகலில் ஊருக்குள் வந்து விட்டு இரவில் தங்களது ஏரியாவுக்கு போய் விடுமாம்.ஆனால் இந்த முறை வந்த யானைகள் போகாமல் டேரா போட்டுள்ளதால் பச்சப்பாளையம் கிராமத்தில் பரபரப்புநிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications