ஆசிரியர் அடி: எலி மருந்து சாப்பிட்ட மாணவன்
சென்னை:வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியையும் தொடர்ந்து அடித்துத் திட்டியதால் வெறுப்படைந்த 9வது வகுப்புமாணவன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள மதுரவாயல் கம்பர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் சுனில் திவாகரன்.ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9வது வகுப்பு படிக்கிறான்.
கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் திவாகரன் வீக் எனத் தெரிகிறது. இதுதொடர்பாக 2 மாதங்களுக்கு முன்புதிவாகரனை வகுப்பு ஆசிரியர் கண்டித்து அடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பும் இதே காரணத்திற்காகஆசிரியர் அடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து திவாகரனின் பெற்றோரை வரவழைத்த தலைமை ஆசிரியை உமா, இனிமேல் இவனைபள்ளிக்கூடத்தில் அனுமதிக்க முடியாது. டிசியை வாங்கிச் செல்லுங்கள் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.அவரை சமாதானப்படுத்திய பெற்றோர், இனிமேல் நன்றாகப் படிப்பான் என்று கூறி பள்ளியில் விட்டுச்சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை திவாகரனை அழைத்த தலைமை ஆசிரியை, ஒழுங்காக படிப்பதில்லை என்று கூறிசரமாரியாக அடித்துள்ளார். இதனால் திவாகரன் வெறுப்படைந்தான். பள்ளிக்கூட இடைவேளை நேரத்தில்வெளியே சென்ற அவன் ஒரு கடையில் எலிக்கு வைக்கும் மருந்தை வாங்கி சாப்பிட்டு விட்டு வகுப்பில் போய்அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தான். உடனடியாக அவனை அருகில் உள்ளமருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மாணவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகடாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திவாகரனின் சகோதரி திவ்யா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவரும்ஆசிரியர் அடித்ததால்தான் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் திவாகரனும் அதேகாரணத்தால் தற்கொலைக்கு முயன்று உயிருக்குப் போராடி வருவதைப் பார்த்து அவனது பெற்றோர் துடித்துப்போய் கதறி அழுத வண்ணம் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications