ரோந்து: ராஜபக்ஷே கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி:பாக் ஜலசந்தியில், இலங்கை கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை கூட்டு ரோந்து மேற்கொள்ளலாம்என்ற இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் யோசனையை இந்தியா நிராகரித்து விட்டது.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள ராஜபக்ஷே, இங்கு வருவதற்கு முன்பு கொழும்பில்செய்தியாளர்களிடம் பேசுகையில், பாக் ஜலசந்திப் பகுதியில் விடுதலைப் புலிகளைக் கண்காணிக்க இந்தியாவும்,இலங்கையும் இணைந்து கூட்டு ரோந்து மேற்கொள்ளலாம் என யோசனை தெரிவித்திருந்தார்.
டெல்லி வந்த அவர் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்தபோது இந்த யோசனையைதெரிவித்துள்ளார். ஆனால் இதை முகர்ஜி திட்டவட்டமாக நிராகரித்து விட்டாராம். கூட்டு ரோந்துக்கான திட்டம்ஏதும் இந்தியாவிடம் இல்லை என்று அவர் ராஜபக்ஷேவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ராஜபக்ஷே அளித்துள்ள பேட்டியில், விடுதலைப் புலிகளின்ஆயுதக் கடத்தலை தடுக்கும் வகையில் இந்தியாவுடன் இணைந்து பாக் ஜலசந்தியில் கூட்டு ரோந்தில் ஈடுபடும்எண்ணம் இலங்கைக்கு இல்லை.
இதுதொடர்பாக நான் பிரணாப் முகர்ஜியிடம் பேசியபோது, உங்களது எல்லையை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள், எங்களது எல்லையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தேன்.
இந்திய மீனவர்களுக்கு பணம் கொடுத்தோ அல்லது மிரட்டியோ ஆயுதங்களை படகுகள் மூலம் விடுதலைப்புலிகள் கடத்தி வருகிறார்கள். அதை தடுத்துக் நிறுத்த வேண்டும் என்றார் ராஜபக்ஷே.
தமிழர்களை கொல்லும் முகமூடி கொலைகாரர்கள்:
இதற்கிடையில் முகமூடி அணிந்த கொலைகாரக் கும்பல் அப்பாவி தமிழர் இளைஞர்களை கொன்று குவித்துவருவதாக இலங்கையியிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
இலங்கையில், மீண்டும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கிருந்து அகதிகளாக வரும் தமிழர்கள்எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. அகதிகளாக வருவோர், இலங்கையில் நடைபெற்று வரும்அட்டூழியங்களை கண்ணீர் மல்க கூறி வருகின்றனர்.
தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தவர்களில் இடம் பெற்றிருந்த ஸ்ரீபிரியா என்பவர் கூறுகையில், வவுனியாநகரில் இலுப்பைக்குளம் என்ற இடத்தில் கடந்த ஒரு வாரமாக முகமூடி அணிந்து கொண்டு வரும் மர்ம நபர்கள்,சாலைகளில் செல்லும் அப்பாவித் தமிழ் இளைஞர்களை குறி வைத்து தாக்கிக் கொல்கின்றனர்.
அவர்கள் யார் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் இளைஞர்களைக் கொன்று வருவதைப் பார்க்கும்போதுராணுவத்தினராக இருக்கக் கூடும் அல்லது சிங்களர்களாக இருக்கும் எனத் தெரிகிறது.
மோட்டார் சைக்கிளில் வரும் அக்கும்பலால் பல அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்குதமிழர்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. பாதுகாப்பான இடங்களுக்கு அவர்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.
நான் பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தேன். இதற்கு மேலும் அங்கு இருக்க முடியாதுஎன்பதால்தான் அகதியாக தமிழகம் வந்துள்ளேன்.
உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. சரிவர பொருட்கள் சப்லை இல்லை. கிடைக்கும்பொருட்களும் மிகக் கடுமையான விலையில் உள்ளன. வசதி படைத்தவர்களால் மட்டுமே பொருட்களை வாங்கமுடியும் என்ற அவல நிலை உள்ளது.
சண்டை எப்போது முடியும், அமைதி எப்போது திரும்பும் என்பது மட்டுமே எங்களது ஒரே சிந்தனையாகஉள்ளது என்றார் ஸ்ரீபிரியா.
இதற்கிடையே, இனிமேல் போர்தான், தமிழீழத்தை அடைவது மட்டுமே ஒரே தீர்வு என்று பிரபாகரன்அறிவித்துள்ளதால், அமைதி ஒப்பந்தத்தின் நிலை என்ன என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம்இலங்கை அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ரம்புககெவல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், போர்நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து விட்டதாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார். மேலும் தனிஈழத்தைத் தவிர வேறு ஒன்றும் தங்களுக்குத் தேவையில்லை என்றும் அவர் கூறி விட்டார்.
எனவே போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கதி என்ன? அது இன்னும் அமலில் உள்ளதா என்பது குறித்து நார்வேகுழுவிடம், போர் நிறுத்த ஒப்பந்தக் கண்காணிப்பு குழுவிடம் அரசு விளக்கம் கேட்டுள்ளது.
அமைதித் தீர்வையே இலங்கை அரசு தொடர்ந்து விரும்புகிறது. அதேசமயம் நாட்டின் பாதுகாப்பையும் விட்டுக்கொடுத்த விட முடியாது. போரை நாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு:
இந்த நிலையில் கிளிநொச்சிக்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் விரைந்துள்ளனர். அங்குபுலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வனை சந்தித்து பிரபாகரன் பேச்சு குறித்து அவர்கள் விளக்கம்கேட்கவுள்ளதாக தெரிகிறது.
உணவு லாரிகள் மீது ராணுவம் தாக்குதல்:
இதற்கிடையில் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில், விடுதலைப் புலிகள் அனுப்பிய உணவு மற்றும் மருந்துப் பொருட்கள்அடங்கிய லாரிகள் மீது இலங்கை ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.அவர்களுக்காக 60 லாரிகளில் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விடுதலைப் புலிகள் அனுப்பி வைத்தனர்.
ஆனால் அந்த லாரிகளை உள்ளே விடாமல் தடுத்த ராணுவம், அவற்றின் மீது ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. ஆனால் விடுதலைப்புலிகள் பதில் தாக்குதலில் ஈடுபடவில்லை என புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications