எல்டிடிஈ வழக்கு- புஷ் அரசுக்கு எதிராக தீர்ப்பு
லாஸ் ஏஞ்சலஸ்:அதிபர் ஜார்ஜ் புஷ் கொண்டு வந்துள்ள தீவிரவாத அமைப்புகள் தொடர்பான சட்டத்தின் சில பகுதிகள்சட்டவிரோதமானது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி நியூயார்க் இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதல்சம்பவத்தைத் தொடர்ந்து, தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்யும் சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டுவந்தது.
இந்த சட்டத்தின் ஷரத்துக்களை செல்லாது என்று அறிவிக்கக் கோரி விடுதலைப் புலிகள், துருக்கியிலிருந்துசெயல்படும் பர்திய கர்கரேன் குர்திஸ்தான் உள்ளிட்ட ஐந்து அமைப்புகளின் சார்பில் லாஸ் ஏஞ்சலஸ்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த அமைப்புகளை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளாகஅமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
பேட்ரியாட் ஆக்ட் என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தின் சில பிரிவுகள் சட்டவிரோதமானது, செல்லாது என்றுதற்போது லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து நீதிபதி ஆட்ரி காலின்ஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களைமுடக்கும் இந்த சட்டத்தின் பிரிவு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. தீவிரவாத அமைப்புகள் குறித்தபட்டியலை தயாரிப்பதில் அதிபருக்கு வரையறையற்ற அதிகாரத்தை கொடுப்பதாக இந்த சட்டப் பிரிவுஅமைந்துள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மீதும் இந்த சட்டம் பாயும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது செல்லாது. அதேசமயம், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு உதவி செய்வதைதடுக்கும் சட்டப் பிரிவு செல்லும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து வெள்ளை மாளிகையும், அமெரிக்க சட்டத்துறையும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.இருப்பினும் நீதித்துறையின் செய்தித் தொடர்பாளர் தாஸியா ஸ்கோலின்ஸ் கூறுகையில், இந்த சட்டத்தின்ஷரத்துகள் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் கூறியிருப்பது தவறானது. சட்டப் பிரிவுகளை முழுமையாகஅது கவனிக்கவில்லை என்று உணர்கிறோம் என்று தெரிவித்தார்.
வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான அரசியல் சட்டஉரிமைகள் மையத்தைச் சேர்ந்த டேவிட் கோல் கூறுகையில்,இந்த சட்டத்தின் மூலம் அதிபர் நினைத்தால் எந்த அமைப்பையும், தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கமுடியும். இதனால் சர்வாதிகார போக்கு உருவாகி விடும். யாரை வேண்டுமானாலும் தண்டிக்க முடியும் என்றசூழ்நிலை உருவாகும் என்றார்.
கடந்த 2004ம் ஆண்டு இதே சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் நீதிபதி காலின்ஸ், ஒரு முக்கியப்பிரிவை நீக்கி உத்தரவிட்டார் என்பது நினைவிருக்கலாம். தீவிரவாத தொடர்பு உடையதாக கருதப்படும்அமைப்புகள் சட்ட வல்லுநர்களின் உதவியை நாட அந்த சட்டப் பிரிவு தடை செய்தது.












Click it and Unblock the Notifications