பெரியாறு-மதுரையிலிருந்து வைகோ நடைபயணம்
சென்னை:முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர்வைகோ டிசம்பர் 18ம் தேதி மதுரையிலிருந்து பாதயாத்திரையைத் தொடங்குகிறார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தென் தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினை முல்லைப் பெரியாறு. 1896ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி 999ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுக்கு முல்லைப் பெரியாறு தண்ணீரைப் பெற சட்டப்படியான உரிமை உண்டு.
தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதங்களை எடுத்து வைத்ததன்விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்திக்கொள்ளலாம் என்றும், அணையை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குகேரள அரசு எந்த முட்டுக்கட்டையும் போடக் கூடாது என்றும் திட்டவட்டமான ஒரு தீர்ப்பினை இந்த ஆண்டுபிப்ரவரி மாதம் 27ம் தேதி வெளியிட்டது.
உச்சநீதிமன்றம் நமக்குத் தீர்ப்பின் மூலமாகக் கொடுத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள இன்றையமுதல்வர் தவறி விட்டார். அவர் கடமை ஆற்றாததன் விளைவாக சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு தமிழகம் பாசன வசதிகளைஅனுபவித்தது. தற்போது 136 அடி உயரத்துக்குத்தான் தண்ணீர் தேக்கப்படுவதால், இரண்டு லட்சம் ஏக்கருக்கும்கூடுதலாக பாசன வசதியைத் தென் மாவட்ட விவசாயிகள் இழந்து விட்டார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டிய நடவடிக்கைகளை வெள்ளம்பெருமளவுக்கு வந்தபோதும் மேற்கொள்ளத் தமிழக அரசு தவறி விட்டது. தமிழகத்தின் சட்டரீதியானஉரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசும் தனது கடமையைசெய்யத் தவறி விட்டது.
டெல்லியில் தமிழக முதல்வரும், கேரள முதல்வரும் சந்தித்துப் பேசியதில் இரு மாநிலங்களின் சம்பந்தப்பட்டஅமைச்சர்கள் ஓரிரு வாரங்களில் இப்பிரச்சினை குறித்துப் பேசுவார்கள் என்றும் அந்தப் பேச்சுவார்த்தை இருமாநில முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படும் என அறிவித்து இருப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் கேடு.
1996ம் ஆண்டு மத்திய அரசில் தங்களது அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக காவிரிப் பிரச்சினையில்கர்நாடக முதல்வரோடு பேச்சுவார்த்தை என்ற நாடகத்தைத் திட்டமிட்டு அப்போது முதல்வராக இருந்த கலைஞர்கருணாநிதி நடத்தியது போலவே தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் தமிழக மக்கள் உரிமையை,சுய அரசியல் லாபங்களுக்காக காவு கொடுக்க முனைந்து தொடர் பேச்சுவார்த்தை என்ற ஏமாற்று நாடகத்தைநடத்த முற்பட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையை நாங்கள் நினைத்தால் உடைப்போம், தண்ணீரைத் தமிழகத்துக்குத் தர விடாமல்தடுப்போம் என்றும் கேரள அமைச்சர்கள் பேசி வருவதும், பொறுப்பற்ற முறையில் நியாய விரோதமாக கேரளமுதல்வர் அதிரடியாக அறிவிப்புகள் செய்வதும் மிகவும் கவலை தருகின்றன.
தமிழகத்தின் தெற்குச் சீமை முல்லைப் பெரியாறு உரிமையை இழந்து பஞ்சப் பிரதேசமாக ஆகி விடக் கூடாதுஎன்பதால் தமிழக உரிமைகளையும், நலன்களையும் தமிழக அரசும், மத்திய அரசும் பாதுகாக்கத் தவறியதையும்,இந்தப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்தால் ஏற்படும் பாதிப்புகளையும் மக்கள் மன்றத்தில்எடுத்து விளக்கி, தமிழக மக்களிடம், குறிப்பாக முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி விவசாயப் பெருமக்களிடம்விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,
வரும் டிசம்பர் 18ம் தேதியன்று எனது தலைமையில் முல்லைப் பெரியாறு உரிமை பாதுகாப்பு நடைப்பயணம்மதுரையில் காலை 10 மணிக்குத் தொடங்கும். செக்கானூரணி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, சின்னமனூர்,உத்தமபாளையம், கம்பம் வழியாகச் சென்று 23ம் தேதி கூடலூரில் நிறைவு பெறும்.
இந்த பாதயாத்திரையில் மதிமுக தொண்டர்களும், விவசாயப் பெருமக்களும் திரளாக பங்கேற்பார்கள்.போக்குவரத்துக்கும், சட்டம் ஒழுங்குக்கும் எந்தக் குந்தகமும் ஏற்படாமல் அண்ணா காட்டிய அறவழியில்முல்லைப் பெரியாறு உரிமைப் பயணம் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார் வைகோ.
காளிமுத்து: கருணாநிதி மீது தாக்கு
இந் நிலையில் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் படத் திறப்பு மற்றும் அஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடந்தது. மதிமுக, பொதுச் செயலாளர்வைகோ இதில் கலந்து கொண்டு காளிமுத்து படத்தை திறந்து வைத்து பேசினார். அவர் கூறுகையில்,
1972ல் நடந்த திமுக மாநாட்டில் எம்ஜிஆர் பேசுகையில், மாநில சுயாட்சியில் தலையிட ராணுவம் வந்தாலும் அந்த ராணுவத்தையும் சந்திப்போம்என்றார். அவர் பேசிய போது பலத்த கைதட்டலுடன் வரவேற்பு எழுந்தது. அதைக் கேட்ட ஒருவரால் (கருணாநிதி) பேச முடியவில்லை.
எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கிய போது அவரை நீக்கியது தவறு, மறுபரிசீலனை செய்யுங்கள் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் காளிமுத்து.காங்கிரஸ் கட்சி ஆட்சியை விட்டு திராவிட இயக்கம் ஆட்சிக்கு வர காளிமுத்து மாணவராக இருந்து நடத்திய மொழிப்போர் தான் காரணம்.
இரு வேறு திராவிட கட்சிகளில் இருந்தபோதும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு பாராட்டிவர்.
கடந்த 2000ம் ஆண்டு இதயக் கோளாறால் அவர் மருத்துவமனையில் இருந்த போது நான் சென்று பார்த்தேன். அப்போது அவர், என்னை ஜெயலலிதாகாப்பாற்றி, எனக்கு புனர் ஜென்மம் அளித்து விட்டார் என்றார்.
மீண்டும் அவர் நோயுற்று நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருந்த போது, அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஈவு, இரக்கம்,மனித நேயத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு ஓட்டல் டெண்டரில் முறைகேடு என்று வழக்கு தொடுத்தார் (கருணாநிதி).
உடல் நலம் பாதிக்கப்பட்ட காளிமுத்துவுக்கு தாங்கும் சக்தி குறைந்து மனபாரம் அதிகமாகி மன அழுத்தம் ஏற்பட்டது. கைது செய்வதாக பயமுறுத்திதினமும் கையெழுத்துப் போடச் சொன்னது அவரது பாச இதயத்தைப் பாதித்து விட்டது. மன அழுத்தம் அவரை மரண வாசலுக்கு கொண்டு சென்று விட்டது.
அப்போதும் கூட கருணாநிதி, என்னுடன் கள்ளக்காதல் வைத்திருந்தார் என்று கூறி காளிமுத்துவை கொச்சைப்படுத்தினார் என்றார் வைகோ.
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும் மாஜி மந்திரியுமான ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், மேடைப் பேச்சாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்காளிமுத்து. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் தனது 16 வயதில் "மேடை மணி என்ற பட்டத்தைப் பெற்றவர். தான் வகிக்கும் எந்தப்பதவிக்கும் தனி மரியாதையை ஏற்படுத்தியவர் என்றார்.
கூட்டத்தில் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், அதிமுக எம்எல்ஏக்கள் கலையரசன், சேகர்பாபு மற்றும் காளிமுத்துவின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications