மீண்டும் பாஜகவிலா? நோ சான்ஸ்-விஜயசாந்தி
ஹைதராபாத்:பாஜகவில் மீண்டும் சேரும் திட்டம் இல்லை. அப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றுதிடிகையும், தல்லி தெலுங்கானா கட்சியின் தலைவருமான விஜயசாந்தி கூறியுள்ளார்.
முன்பு பாஜகவில் இருந்தவர் லேடி சூப்பர் ஸ்டாரான விஜயசாந்தி. அதன் பின்னர் தெலுங்கானா பிரச்சினையில்பாஜக அக்கறை காட்டவில்லை என்று கூறி அதிலிருந்து விலகி தல்லி தெலுங்கானா (அதாவது தாய்தெலுங்கானா) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
சில நாட்களுக்கு முன்பு அவர் பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அத்வானியை சந்தித்துப்பேசினார். இதனால் விஜயசாந்தி மீண்டும் பாஜகவுக்குத் திரும்பப் போவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அதை மறுத்துள்ளார் விஜயசாந்தி. ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜகவில்நான் 9 ஆண்டுகாலம் இருந்தேன். தெலுங்கானா தனி மாநிலப் பிரச்சினையில் கட்சியுடன் எனக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அதிலிருந்து விலகி தனிக் கட்சி கண்டேன்.
தெலுங்கானாவின் சுதந்திரத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். நான் அத்வானியை சந்தித்தது,தெலுங்கானா தொடர்பாக சில ஆலோசனைகளை நடத்தத்தான். வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நான் பாஜகவில்மீண்டும் சேரப் போவதாக சிலர் வதந்தி பரப்பி விட்டனர்.
பாஜகவில் இணையும் திட்டமே என்னிடம் இல்லை. கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக உள்ளேன்.விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என்றார் விஜயசாந்தி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications