கேள்வி பதில் பிரிவை மூடும் கூகுள்
சான்பிரான்ஸிஸ்கோ:கூகுள் நிறுவனம் தனது கேள்வி பதில் பிரிவை மூட முடிவு செய்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமும், யாகூநிறுவனமும் இலவச கேள்வி பதில் பிரிவை தொடங்கியதால் இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூகுள்.காம் தனது கேள்வி பதில் பிரிவை (கூகுள் ஆன்சர்ஸ்) தொடங்கியது. கூகுள்நிறுவனத்தின் நிறுவனரான லாரி பேஜ் யோசனைப்படி இது தொடங்கப்பட்டது. குறைந்தது 2 டாலர் எனகட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆய்வாளர்களின் கேள்விகளுக்கு இதில் விடை கொடுக்கப்படும்.
கூகுளின் இந்த சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் யாகூ நிறுவனம் கூகுளுக்குப் போட்டியாகஇலவச கேள்வி பதில் பிரிவை ஆரம்பித்ததும் கூகுள் கேள்வி பதில் பிரிவுக்கு வருவோரின் எண்ணிக்கை அடிவாங்கியது. அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதேபோன்ற இலவச சேவையை தொடங்கியது.
இதனால் கூகுளை சீந்துவார் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தனது கேள்வி பதில் பிரிவை மூடிவிட கூகுள் முடிவு செய்தது. இதுதொடர்பான அறிவிப்பையும் தனது இணையதளத்தில் அது வெளியிட்டுள்ளது.
இந்த வாரம் முதல் கேள்விகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும், கடைசியாக பெறப்பட்ட கேள்விகளுக்குஇந்த ஆண்டு இறுதி வரை பதில் தரப்படும் என்றும் அது அறிவித்துள்ளது. அதேசமயம், ஏற்கனவே கேட்கப்பட்டகேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் இணைய தளத்தில் தொடர்ந்து இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
கூகுளின் கேள்வி பதில் பிரிவு நிறுத்தப்படும் முடிவால் அதன் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications