சச்சார் கமிட்டி பரிந்துரை-கருணாநிதி வரவேற்பு
சென்னை:முஸ்லீம்களுக்கு அரசு வேலையில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு பரிந்துரைகளை செய்துள்ள சச்சார் கமிட்டி அறிக்கையை முதல்வர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லீம்களின் சமூக, கல்வி, பொருளாதர நிலை குறித்துஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி ராஜீந்தர் சச்சார் கமிட்டியின் அறிக்கை வரவேற்புக்குரியவை.
இந்த அறிக்கை மட்டுமல்லாது அது கூறியுள்ள பரிந்துரைகளும் வரவேற்புக்குரியவை. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், சம வாய்ப்பு ஆணையம் அமைக்கவேண்டும், அரசியலிலும் முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வகை செய்ய வேண்டும் என்றபரிந்துரைகளை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, தனியார் துறையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு இட ஒதுக்கீடு தேவை எனபரிந்துரைத்துள்ள ரதிலால் கமிட்டி அறிக்கையும் வரவேற்புக்குரியதே. இதேபோன்ற இட ஒதுக்கீட்டைபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications