அம்பேத்கர்: நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு
டெல்லி:உ.பி. மாநிலம் கான்பூரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தைநாடாளுமன்றத்தில் பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுப்பி பிரச்சினைகிளப்பியதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்தன.
கான்பூரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதால் உத்தரப் பிரதேசத்தில்தொடங்கிய வன்முறை மகாராஷ்டிர மாநிலத்திற்குப் பரவியது. மகாராஷ்டிரத்தில்பெரும் கலவரம் மூண்டது. நேற்று நடந்த பெரும் கலவரத்தில் 2 ரயில்கள் தீவைத்துஎரிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பேருந்துகள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.
இன்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வீச்சும், போராட்டமும் தொடர்ந்துநடந்து வருகிறது.
இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மக்களவை கூடியபோது,பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக உறுப்பினர்கள் இதுகுறித்து விவாதிக்க கேள்வி நேரத்தைஒத்திவைக்க வேண்டும் என கோரின கோஷமிட்டனர்.
ஆனால் சபாநாயகர் அனுமதி தர மறுத்ததால், இரு கட்சியினரும் பெரும் அமளியில்ஈடுபட்டனர். இதனால் சபை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோலராஜ்யசபாவும் 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசுகையில், உ.பி.மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுதத வேண்டும் என ஆவேசமாககோஷமிட்டார்.
அவர்களை சமாதானப்படுத்திய சபைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் இதுகுறித்துவிசாரிக்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்றுகோரினார். ஆனால் அதில் சமாதானமடையாத பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் உ.பி.அரசைக் கலைக்க வண்டும். சிலை உடைப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நிடத்தவேண்டும் என்று கோரினர்.
அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் சுரேஷ் பச்செளரி சிலைஉடைப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆனால்சபையில் நிலவிய அமளியால் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்துராஜ்யசபை ஒத்திவைக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications