என் மீது கருணை காட்டுங்கள்: சஞ்சய் தத்
மும்பை:மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சஞ்சய் தத் குற்றவாளி என தடா நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து தனக்குகருணை காட்டி குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என சஞ்சய் தத் நீதிபதியிடம் உருக்கமாக கேட்டார்.
1993ம் ஆண்டு மும்பை நகரில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில்நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வழக்குதொடரப்பட்டது. அதில் சஞ்சய் தத்தும் ஒருவர்.
ஏ.கே.56 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சில தினங்களுக்குமுன் சஞ்சய் தத் குற்றவாளி என தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கான தண்டனை காலம் 3 ஆண்டுமுதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தண்டனை காலம் குறித்து தனது கருத்தினை தெரிவிப்பதற்காக சஞ்சய் தத் தடா நீதிமன்றத்தில் ஆஜர்ஆனார். அப்போது நீதிபதி பி.கே.கோடோயிடம் அவர் கூறியதாவது,
என் குடும்பத்தில் நான் ஒருவன் தான் சம்பாதிக்கிறேன். 18 வயதான எனது தங்கைநியூயார்க்கில் படித்து கொண்டு இருக்கிறாள். அவளது எதிர்காலம் என்னைநம்பித்தான் இருக்கிறது. 18 ஆண்டுகளுக்கு முன் எனது தந்தை சுனில் தத் இறந்ததில்இருந்து குடும்ப பொறுப்புகளை நான் தான் கவனித்து வருகிறேன்.
சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுதற்காக நான் தனிப்பட்ட முறையில் நிதிதிரட்டி பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்தேன். மும்பை தெடார் குண்டு வெடிப்புவழக்கில் 16 மாதங்கள் சிறையில் இருந்த 1995ல் ஜாமீனில் விடுதலை ஆனேன். 11ஆண்டுகள் ஜாமீனில் இருந்த வருகிறேன்.
இந்த காலகட்டத்தில் நீதிமன்றம் அளித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான்நடந்து வருகிறேன். இதற்கு முன் என் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. நான்இந்த நாட்டையுடம், நாட்டு மக்களையும் நேசிக்கிறேன். என் மீது தயவு செய்துகருணையும், இரக்கமும் காட்டி குறைந்தபட்ச தண்டனை வழங்குங்கள் என அவர்கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications