பிளஸ்டூ பாடத்தில் கடினமான பகுதிகள் நீக்கம்
சென்னை:பிளஸ்டூ வகுப்பில், கணிதம் உள்ளிட்ட 8 பாடங்களில் இடம் பெற்றிருந்த கடினமானபகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுத் தேர்வில் இந்த நீக்கம்அமல்படுத்தப்படுகிறது.
பிளஸ்டூ பாடத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசின் திட்டக் குழுத்துணைத் தலைவர் நாகநாதன் தலைமையில் கமிட்டி ஒன்றை தமிழக அரசு நியமித்தது.இந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம்தென்னரசிடம் அளித்தது.
இது குறித்து தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிளஸ் ஒன் மற்றும்பிளஸ்டூ பாடத் திட்டத்தில் உள்ள கடினமான பகுதிகளை நீக்க வகை செய்யும்பரிந்துரை அறிக்கை அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ளபரிந்துரைகளை ஏற்று மாணவ, மாணவியர் பயனடையும் வகையில் அதைஅமல்படுத்துமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பிளஸ்ஒன், பிளஸ்டூ பாடத் திட்டத்தில், தமிழ், ஆங்கிலம், கணிதம்,வேதியியல், இயற்பியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் பாடங்களில் உள்ளசுமையான, கடினமான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளிலிருந்து இந்தஆண்டு பொதுத் தேர்விலும், பிற தேர்வுகளிலும் கேள்விகள் கேட்கப்பட மாட்டாது.நீக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து அடுத்த ஆண்டு புத்தகம் அச்சிடப்படும்.
வரலாறு, பொருளாதாரப் பாடங்களில் மாற்றம் ஏதும் இல்லை. இருப்பினும் பலபக்ககங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. சில படங்கள் தெளிவின்றி உள்ளது.புரிந்து கொள்ளும் வகையில் அவை இல்லை. எனவே இதே பாடத் திட்டங்களுடன்எளிய முறையில் தரம் குறையாமல் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில்,இந்தப் பாடங்கள் திருத்தி புதிதாக எழுதப்படவுள்ளது. அடுத்த ஆண்டே இதுஅமல்படுத்தப்படும் என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications