ஜெ மாஜி வளர்ப்பு மகனுக்கு பிடிவாரன்ட்
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சின்ன எம்ஜிஆர் நற்பணி மன்றத்தை நடத்தி வருகிறார்.தானும் ஒரு கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு தன்னை சின்ன எம்ஜிஆர் என்று போஸ்டர் அடித்து ஒட்டிஅரசியல் நடத்தி வருகிறார்.
ஜெயலலிதாவின் நம்பிக்கையை இழந்த சுதாகரன் மீது அதிமுக ஆட்சியில் வழக்குகள் பாய்ந்தன. இந்த நற்பணிமன்றத்தின் பணத்தை கையாடல் செய்ததாக அதன் பொதுச் செயலாளர் கோபு ஸ்ரீதர் என்பவரை துப்பாக்கியால்மிரட்டியதாக 2001ம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் சுதாகரன் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அவரது வீட்டில் இருந்து 16 கிராம் ஹெராயினைகைப்பற்றியதாக வழக்கு போட்டனர். இது தொடர்பாக சுதாகரன் மீது போதை பொருள் தடுப்பு சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குவிசாரணைக்கு சுதாகரன் 2 முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நேற்றைய விசாரணையின் போதும் அவர்ஆஜராகவில்லை.
அவர் சார்பில் விலக்களிக்கத் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துஉத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு விசாரணையை டிசம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications