சென்னை பெண்ணுக்கு இடுப்பு மாற்று ஆபரேசன்
சென்னை:தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக 33 வயது பெண்ணுக்கு முழுமையான இடுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில்தான் இந்த சாதனை நடந்துள்ளது. இதுகுறித்துஅறுவைச் சிகிச்சைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் ஏ.கே.வெங்கடாச்சலம் கூறுகையில், அந்தநோயாளிக்கு இரு இடுப்புகளிலும் ஆஸ்டினோநெக்ரோஸிஸ் என்ற பிரச்சினை இருந்தது.
இதையடுத்து இடுப்பு எலும்புகளை முற்றிலும் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக மேலை நாடுகளில்பயன்படுத்தப்படும் அதி நவீன அறுவைச் சிகிச்சை முறையைக் கடைப்பிடிக்கவும், அதையும் நாங்களேசெய்யவும் தீர்மானித்தோம்.
நமது நாட்டில் இந்த அதி நவீன அறுவை சிகிச்சை முறை சமீபத்தில்தான் அறிமுகமானது. இந்த நிலையில் அந்தஅறுவைச் சிகிச்சையை தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தியது இங்குதான். அதன் மூலம் அறுவைச் சிகிச்சைமேற்கொண்ட முதல் டாக்டரும் நான்தான்.
இதற்கு முன்பு இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளை வெளிநாடுகளிலிருந்து வரும் டாக்டர்கள்தான் செய்துவந்தனர். இந்த அறுவைச் சிகிச்சை மூலம் எலும்புகளுக்கு ஏற்படும் சேதாரம் வெகுவாக குறைக்கப்படும். மிகச்சிறிய அளவிலான சேதமே ஏற்படும். ஆஸ்டினோநெக்ரோஸிஸ் பிரச்சினையால் ஏற்படும் தொடை வலியும்முற்றிலும் போய் விடும்.
இதேபோன்ற அறுவைச் சிகிச்சையை நான் இங்கிலாந்து மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் பலமுறைசெய்துள்ளேன்.
இந்த அறுவைச் சிகிச்சையின்போது தொடை எலும்பின் மேல் பகுதியான ஃபெமூர் என்ற எலும்பின் கழுத்துப்பகுதி சேதமடைவது தவிர்க்கப்படும். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் இதே பிரச்சினை மறுபடியும் வருவதுஅனேகமாக தவிர்க்கப்படும்.
இதுபோன்ற அறுவைச் சிகிச்சை முறை மூலம் எலும்புகளை சரியாக பொருத்த முடியும், எலும்புகளின் சேதாரம்குறையும், சில நாட்கள் மட்டுமே நோயாளி மருத்துவமனையில் இருக்க வேண்டி வரும். நோயாளிகளுக்கும்சிரமம் பெருமளவில் குறையும்.
அதேசமயம், எலும்புகள் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை செய்ய முடியும். அனைவருக்கும்செய்ய முடியாது என்பதும் முக்கியமான ஒன்று என்றார் வெங்கடாச்சலம்.
இடுப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண்ணான லலிதாவுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையானமூட்டு வலி இருந்து வந்ததாம். பல எலும்பு சிகிச்சை நிபுணர்களை அணுகியும் நிவாரணம் கிடைக்கவில்லை.தற்போது அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் வேகமாக தேறி வருகிறார். தற்போது வாக்கர் கருவி மூலம்அவர் நடக்க பயிற்சி செய்து வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications