கிணற்றில் ஜீப் கவிழ்ந்து 2 பேர் பலி
கோவை:கிணற்றில் ஜீப் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டம் திருப்பூர் அருகே மொடக்குறிச்சியில், சாலையோரம் இருந்த கிணற்றில் ஜீப் கவிழ்ந்ததில், 2பேர் பலியானார்கள். ஈரோட்டில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்கள் கனகரத்தினம் (45),செந்தில்வேலன் (35).பொள்ளாச்சியில் நடந்த கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருவரும் ஜீப்பில் சென்றனர்.வரவேற்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு இருவரும் திரும்பிக் கொண்டிருந்தனர்.
வரும் வழியில் ஜீப்பை ஓட்டி வந்த கோட்டீஸ்வரன் தனக்கு சோர்வாக இருப்பதாக கூறியதால், அவரைஓய்வெடுக்கச் சொல்லி விட்டு கனகரத்தினம் ஜீப்பை ஓட்டினார். ஆனால் மொடக்குறிச்சியில் ஜீப் வந்தபோதுலேசாக கண்ணயர்ந்து விட்டார்.
இதனால் நிலைகுலைந்து தாறுமாறாக ஓடிய ஜீப் சாலையோரம் இருந்த கிணற்றில் பாய்ந்தது. இதில்கனகரத்தினம், செந்தில்வேலனும் பரிதாபமாக இறந்தனர். கோடீஸ்வரன் காயமடைந்தார்.
இரு உடல்களையும் போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications