ஆஸி: சுறாவிடம் காலை இழந்த சிறுவன்
சிட்னி:ஆஸ்திரேலியாவில் கடலில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் சுறாமீனிடம் சிக்கி தனது காலை இழந்தான்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் தென் மேற்கே வார்டன் என்ற கடற்கரைப் பகுதியில் ஒரு15 வயது சிறுவன் தனது நண்பர்களோடு நீச்சலடித்துக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு ஒரு சுறா மீன் அவர்களை நெருங்கியது. இதைப் பார்த்து அந்தசிறுவர்கள் பயந்து அலறி தப்பி ஓட முயன்றனர். ஆனால் அந்த 15 வயது சிறுவன்மட்டும் சுறாவிடம் சிக்கிக் கொண்டான். மீனிடம் சிக்கிய அந்த சிறுவன் தனது வலதுகாலை இழந்து உயிர் தப்பினான். வலது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை மீன்கடித்து துண்டித்து விட்டது.
அந்தப் பகுதியில் நீந்திக் கொண்டிருந்த மற்றவர்கள் விரைந்து வந்ததால் காலோடுதப்பினான் சிறுவன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுவன்தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.
இப்பகுதியில் சுறா மீன்கள் அதிகம் உள்ளதாக ஏற்கனவே காவல்துறைஎச்சரித்துள்ளது. ஆனால் அதை மீறி இச்சிறுவர்கள் நீச்சலுக்காக போனதால் சிறுவனின்கால் பறிபோனது.
சிறுவனின் காலைத் துண்டித்த மீனை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் மூலம் தேடுதல்வேட்டை நடந்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டில் மட்டும் சுறா மீன்களிடம் பலர் சிக்கியுள்ளனர்.பெர்த் நகரில் கடந்த ஜனவரி மாதம் ஒரு நீச்சல் வீரர் சுறாவிடம் சிக்கிஅதிர்ஷ்டவசமாக தப்பினார். ஆனாலும் அவரது கைகள் பறிபோய் விட்டன. அதேமாதத்தில் வட கிழக்கு பகுதியில் 21 வயது பெண் சுறாவிடம் சிக்கி உயிரிழந்தார்.
உலகம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 668 பேர் சுறாக்களிடம்சிக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications