பெரியாறு: விழிப்புடன் இருப்போம்-கருணாநிதி
சென்னை:முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் இரு மாநில முதல்வர்களும்பேச்சுவார்த்தயை தொடங்கி வைத்துள்ளோம். தொடர்ந்து பேசி தீர்வு காணப்படும்என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில்,
இரு மாநில முதல்வர்களும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கிவைத்தள்ளோம். எந்த மாநிலத்திலும் முதல்வர்களை விட அந்தத்துறைஅமைச்சர்கள்தான் துறை பற்றிய நுணுக்கங்களையும், விளக்கங்களையும்,அறிந்திருக்க முடியும்.
உலகில் எந்தப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையும் முதல் நாளே இறுதித் தீர்ப்பைகண்ட வரலாறு இல்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் இறுதித் தீர்ப்புகாண வேண்டும் என்பதில் தமிழக அரசு விழிப்புடன் இருந்து செயல்படும். இதில்யாருக்கும் ஐயம் தேவையில்லை.
கேள்வி: இப்பிரச்சினையில் இரு வேறு கட்சிகள் உண்ணாவிரதம், நடைப்பயணம்போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது ஏன்?
பதில்: ஒவ்வொரு கட்சிக்கும் இப்பிரச்சனையில் அக்கறை இருக்கிறது என்பதைஇப்படித்தான் காட்டிக் கொள்ள முடியும். அவர்களின் செயல்பாட்டில் குறைஇருப்பதாக தெரியவில்லை. உள்ளத்தால் ஒருவரே மற்று, உடலினால் பலராய்க்காண்பார் என்ற பாவேந்தர் பாடலுக்கு இவை எடுத்துக் காட்டுக்கள்.
கேள்வி: போரூர் ஏரிக்குள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியவர்கள் வேறு இடத்தில்இடம் கொடுக்கப்பட்ட பிறகும் முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக செய்திகளவந்துள்ளதே?
பதில்: ஏரியில் எந்தவித அனுமதியும் இல்லாமல் சிலர் குடிசைகளைக் கட்டிக் கொண்டுகோர்ட் அளித்த பல தீர்ப்புக்குப் பிறகும் காலி செய்ய மறுத்தார்க்கள். தண்ணீர் தேக்கிவைக்கப்பட வேண்டிய இடத்தில் குடிசைகளை அமைத்துக் கொண்டதால் சென்னைமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. சுகாதாரம் அறவே கெட்டுப் போனது.
சில இடைத் தரகர்களும் குடிசைகளை கட்டிக் கொண்டு அவற்றை ஏழை, எளியமக்களுக்கு வாடகைக்கும் விற்பனைக்கும் கொடுத்தார்கள். அரசு அவர்களை காலிசெய்ய நடவடிக்கை எடுத்ததும் இடைத்தரகர்கள் சேர்ந்து கொண்டு போராட்டம்,ஆர்ப்பாட்டம், தர்ணா என இறங்கி விட்டனர் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மேலும் மேற்கு வங்க சட்டசபையில் வரலாறு காணாத அளவுக்கு அடிதடி, மைக்உடைப்பு நடந்தது கவலைக்குரிய ஒன்று என்றும் கூறியுள்ளார்.
பேச்சு முடிஞ்சு போச்சா?: துரைமுருகன்
முன்னதாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,
டெல்லியில் சமீபத்தில் முதல்வர் கருணாநிதியும், கேரள முதல்வர் அச்சுதானந்தனும் மத்திய அமைச்சர் முன்னிலையில், நடத்திய பேச்சுவார்த்தை பற்றியும்,அதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக இரு மாநில அமைச்சர்கள் கலந்து பேச இருப்பது பற்றியும் சில கட்சித் தலைவர்கள் அவர்கள் விருப்பம் போலஏடாகூடமாக விமர்சனங்கள் செய்கிறார்கள்.
இப்பிரச்சினை குறித்து தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த கடந்த அக்டோபர் 23ம் தேதி தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் நடத்திய அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அந்த சில கட்சிகளின் தலைவர்கள் மறந்து விட்டதுதான் ஆச்சரியமாக உள்ளது.
அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுதான்:
முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து தமிழக அரசின் சார்பாக எடுத்து வைத்த நியாயங்களை ஏற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைநிறைவேற்றுவதற்கு முன்வராத கேரள அரசின் போக்கைச் சுட்டிக் காட்டி உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், நல்லெண்ண சமிக்ஞையாகமத்திய அரசு முன்னிலையில், தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சு நடத்த இக்கூட்டம் இணக்கம் தெரிவிக்கிறது.
என்றாலும் அதிலும் உரிய பலன் கிடைக்காதபட்சத்தில் மீண்டும் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று பிறப்பித்தஉத்தரவான அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்பதையும், அணையைப் பலப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளைமேற்கொள்ளும்போது கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன்;
தமிழக அரசுக்கு கேரள அரசு அதிகாரிகள் எந்தவித இடையூறையும் ஏற்படுத்தக் கூடாது என்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுஉத்தரவளிக்குமாறு முறையீடு செய்து கொள்வதென்றும், அத்தகைய உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இதுதான் அந்தத் தீர்மானம்.
தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் தலைவர்கள் கூறுவது போல, முல்லைப் பெரியாறு பிரச்சினை டெல்லியில் நடைபெற்ற பேச்சுடன் முடிந்து விடவில்லை.அடுத்த கட்ட முயற்சிகள் மேற்கொள்வதற்கு ஏற்கனவே அக்டோபரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றியுள்ள இந்த்த தீர்மானமேஆதாரமாக விளங்குகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications