முல்லைப் பெரியாறு-அந்தோணி ஓதும் வேதம்!

Subscribe to Oneindia Tamil

கோழிக்கோடு:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக, கேரள மாநிலங்கள்சம்பந்தப்பட்டவை. இதில் மத்திய அமைச்சர்கள் யாரும் குறுக்கிட்டு கருத்து கூறக்கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு சமீபத்தில் கேரள அரசு கடற்படை வீரர்களைஅனுப்பி ஆராய முற்பட்டது. தமிழகத்தை இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பில்ஆழ்த்தியது. 2 நாட்களுக்கு கேரள எல்லைக்குள் ஒரு வாகனத்தையும் விடாமல்தடுத்து தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்திகேரளத்தை கலங்கடித்தனர்.

கடற்படை வீரர்களை அனுப்பிய விவகாரத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர்ஏ.கே.அந்தோணியின் பெயர் அடிபட்டது. முதல்வர்அச்சுதானந்தன் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே ஏ.கே.அந்தோணி கடற்படையினரை அனுப்பி உதவியதாககூறப்பட்டது.

இந்த நிலையில், அந்தோணி வித்தியாசமாக ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இப்பிரச்சினையில்ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். எனக்கும் அதுபோல ஒரு கருத்துஇருக்கும். ஆனால் நான் மத்திய அமைச்சர். அப்படி இருக்கையில் அதைவெளிப்படையாக சொல்ல முடியாது.

இரு மாநிலங்களுக்கும் இடையிலான இந்தப் பிரச்சினையில், எந்த மத்தியஅமைச்சர்களும் தங்களது மாநிலத்திற்கு ஆதரவாகா பேசக் கூடாது. மத்தியஅமைச்சர்கள் நாடு முழுவதற்கும் பொதுவானவர்கள். ஒரு சார்பாக அவர்கள் பேசுவதுசரியாக இருக்காது என்றார் அந்தோணி.

அப்போ, கடற்படையை அனுப்பியது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+