சித்து ராஜினாமா: சபாநாயகர் நிராகரிப்பு
டெல்லி:கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமானசித்துவின் ராஜினாமா கடிதத்தை, தொழில்நுட்பக் காரணங்களுக்காக ஏற்க முடியாது என்று கூறி லோக்சபாசபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நிராகரித்து விட்டார்.
இதுகுறித்து சபாநாயகர் அலுவலகம் தெரிவிக்கையில், அமிர்தசரஸ் எம்.பியான நவ்ஜோத் சிங் சித்து, தனதுகடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அந்தக் கடிதத்தை தற்போதைய வடிவில் ஏற்க முடியாது.
லோக்சபா விதி எண் 240ப்படி, ஒரு உறுப்பினர் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தனது ராஜினாமா கடிதத்தைவழங்க வேண்டும். ராஜினாமாக் கடிதம் நேரடியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். காரணம் எதுவும்குறிப்பிடப்பட்டிருக்கக் கூடாது.
ஆனால் சித்துவின் கடிதம் அப்படி இல்லை. சில காரணங்களைக் கூறி ராஜினாமா செய்வதாக அவர்தெரிவித்துள்ளார். எனவே அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்க முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications