பஞ்.தலைவர் பதவி: அதிமுகவுக்கு திமுக ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தேனி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு திமுக ஆதரவு தரும் எனமுதல்வர் கருணாநிதி தன்னிடம் உறுதியளித்திருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தேனி மாவட்ட பஞ்சாயத்துக்கான மொத்தம் உள்ள 10 கவுன்சிலர்களில் 6 இடங்களை திமுக பெற்றுள்ளது.இந்தப் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால். திமுக சார்பில் வெற்றி பெற்ற 6 பேரில் ஒருவர் கூடதலித் இல்லை.

ஆனால் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களில் 2 பேர் தலித்துகள் ஆவர். திமுகவால் தலைவர் பதவியைப் பிடிக்க முடியாது என்ற காரணத்தால் தலைவர் பதவித் தேர்தலை திமுககவுன்சிலர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதனால் 3 முறை தேர்தல் நடத்தத் திட்டமிட்டும் நடத்தமுடியவில்லை.

இதனால் தேனி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவி காலியாகவே உள்ளது. இதைத் தொடர்ந்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

அப்போது அதிமுக சார்பில் நிறுத்தப்படும் தலித் கவுன்சிலரை தலைவராக தேர்ந்தெடுக்க திமுக உதவ வேண்டும்என்று கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை கருணாநிதி ஏற்று, அதிமுக கவுன்சிலர் தலைவராகதேர்ந்தெடுக்கப்பட திமுக நிச்சயம் உதவும் என்று உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சார்பில் தாழ்த்தப்பட்டோர் வெற்றிபெற்றிருக்கும் நிலையில், அவர்களில் ஒருவர்தான தலைவராக முடியும்.

இத்தகைய சூழலில் முதல்வர் கருணாநிதியை கடந்த 30ம் தேதி சந்தித்தபோது இதுகுறித்துப் பேசினோம்.அப்போது அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் தலைவராக, திமுக உறுப்பினர்கள் வாக்களிப்போம் என சமத்துவபெரியார் கருணாநிதி எங்களிடம் உறுதியளித்தார்.

அதிமுகவை திமுக ஆதரிக்குமென்று கருணாநிதி அறிவித்ததை விடுதலைச் சிறுத்தைகள் பாராட்டுகிறது என்றுகூறியுள்ளார் திருமாவளவன்.

தேனி மாவட்ட பஞ்சாயத்துக்குத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூடதிமுகவினர்தான் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர் என்பதால் நிர்வாகம் நிம்மதியாகநடக்குமா என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+