பிகார்-ரயில் மீது பாலம் விழுந்து 47 பேர் பலி
பாட்னா:பிகார் மாநிலம் பகல்பூர் என்ற இடத்தில் சாலை மேம்பாலம் உடைந்து ரயில் மீது விழுந்ததில் ரயிலில் பயணம் செய்த 47 பேர்பரிதாபமாக பலியானார்கள்.
நோற்று காலை 6.30 மணியளவில், பகல்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பாலத்திற்குக் கீழே ஜமல்பூர்-ஹெளராஎக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலைப் பாலத்தின் ஒரு தூண் திடீரென இடிந்து விழுந்தது. இதனால்பாலம் அப்படியே மொத்தமாக இடிந்து ரயில் மீது விழுந்தது. இதில் எஸ்-8 பெட்டி சிக்கிக் கொண்டது.
வேகமாகப் போன ரயில் மீது தூணும் கூடவே பாலமும் சரிந்து விழுந்ததில் அந்தப் பெட்டியே நசுங்கிசின்னாபின்னாவாகிவிட்டது. இதில் அந்தப் பெட்டியில் இருந்த 47 பயணிகள் உடல் நசுங்கி பலியாயினர். மேலும் 30க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இடிந்த பாலம் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பாதுகாப்பற்ற பாலமாக இது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப்பாலத்தை இடிக்கும் பணிகளும் நடந்து வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பாலத்தின் மீது சாலைப் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுள்ளது.
ரயில்கள் ஏற்படுத்தும் அதிர்வு காரணமாக பாலம் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வந்தது. இந் நிலையில் இப்போது 47பேரின் உயிரைப் பறித்து இப்பாலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக கிழக்கு ரயில்வேயைச் சேர்ந்த 2 ரயில்வே பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரயில்போக்குவரத்து நடந்து கொண்டிருந்த நிலையில் பாலத்தை இடிக்கும் பணியை மேற்கொண்டதற்காக இவர்கள் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
விபத்து காரணமாக இப்பாதை வழியாக செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத யாதவ் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட விரைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications