தர்மபுரி: அம்பேத்கர் சிலை பீடம் தகர்ப்பு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:தர்மபுரி அருகே அம்பேத்கர் சிலையின் பீடம் தகர்க்கப்பட்டதால் தலித் சமூகத்தினர் சாலை மறியல் செய்தனர்.அப்பகுதியில் பதட்டம் நீடிப்பதால் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

உ.பி. மாநிலம் கான்பூரில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்டதால் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் கலவரம்நடந்தது. இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே சிந்தல்பாடி என்ற கிராமத்தில் உள்ள பேருந்துநிலைய வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் பீடத்தை சில விஷமிகள் தகர்த்தனர்.

சிலைக்கு மாலை அணிவிக்க மேலே ஏறுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் ஏணியும்உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் தலித் சமூகத்தினர் திரளாக கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். விடுதலைச் சிறுத்தைகள்கட்சியைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்தனர். உடனடியாக கடைகள் அடைக்கப்பட்டன.

எஸ்.பி. ஜெயராம் தலைமையில் போலீஸார் விரைந்து கூட்டத்தினரை அமைதிப்படுத்தி கலைந்து போகச்செய்தனர். தொடர்ந்து பதட்டம் நிலவியதால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சிலையின் பீடத்தை தகர்த்த விஷமிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+