சென்னையில் ப்ளூ லைன், எல்லோ லைன் பஸ்கள்
சென்னை:சென்னை நகரில் நவீன வசதிகளுடன் கூடிய எல்லோ லைன் மற்றும் ப்ளூ லைன் பேருந்து சேவை இன்று முதல்அமல் செய்யப்படுகிறது. முதல்வர் கருணாநிதி இதை தொடங்கி வைத்தார்.
சென்னை நகரில் 2000க்கும் மேற்பட்ட பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.இத்தனை பேருந்துகள் இருந்தும் கூட பயணிகள் நெரிசல் குறையவில்லை.
இந்த நிலையில் சொகுசு வசதிகளுடன் கூடிய குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும் வகையிலானப்ளூ லைன் மற்றும் எல்லோ லைன் பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தத்திட்டமிட்டது.
இந்த சேவையை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகளில் வழக்கமானபேருந்துகளில் இருப்பது போல இல்லாமல், சொகுசான குஷன் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதிகபயணிகளை அடைக்காமல் குறைந்த அளவிலான பயணிகளே இதில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இப்பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணமே 5 ரூபாயாகும். அதிகபட்சமாக ரூ. 15 வசூலிக்கப்படும். எல்லோலைன் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும். ப்ளூ லைன் பேருந்துகள், வழக்கமானஎக்ஸ்பிரஸ் பேருந்துகளின் நிறுத்தங்களில் நின்று செல்லும்.
எல்லோ லைன் பேருந்துகள் முதலில் 7 வழித் தடங்களில் இயக்கப்படுகிறது. மொத்தம் 15 பேருந்துகள்இயக்கப்படவுள்ளன. அதேபோல ப்ளூ லைன் பேருந்துகளும் 15 பேருந்துகள் வீதம் 7 வழித் தடங்களில்அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதுதவிர பழைய பேருந்துகள் 70 மாற்றப்பட்டு அவற்றுக்குப் பதில் புதிய பேருந்துகள்அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதுதவிர வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் 139 புதிய பேருந்துகளையும்முதல்வர் தொடங்கி வைத்தார். மொத்தமாக 242 பேருந்துகளை தீவுத் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதிதொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications