டெண்டுல்கர் ஆட்டம்-கருணாநிதி விமர்சனம்
சென்னை:சமீப காலமாக 10 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகி வருவதால்தான் டெண்டுல்கருக்கு, டென்டுல்கர் எனபெயர் வந்தது போல என முதல்வர் கருணாநிதி கிண்டலாக விமர்சித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவது குறித்து கருணாநிதிகருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், டெண்டுல்கர் அண்மைக் காலமாக பத்து ரன்களுடன் அவுட்ஆகி விடுகிறார். அதனால்தான் டென்டுல்கர் என்று பெயர் போல.
இப்படியே ஆடிக் கொண்டிருந்தால் உலகக் கோப்பையை இந்தியா மறந்து விடலாம் என கவாஸ்கர் கூறியுள்ளார்.கிரிக்கெட்டையே மறந்து விடலாம் என்பதைத்தான் அவர் அப்படிக் கூறியிருக்கிறார் போல என கூறியுள்ளார்கருணாநிதி.
தேனி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி தேர்தலில் அதிமுகவுக்கு திமுக ஆதரவு கொடுப்பதாக வெளியானசெய்தி குறித்து கருணாநிதி கருத்து தெரிவிக்கையில், தேனி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும்.
அந்த மாவட்ட ஊராட்சிசிக்கு மொத்த உறுப்பினர்கள் 10 பேர். இவர்களில் ஆறு பேர் திமுகவினர். அவர்களில்ஆதி திராவிட வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே கோரம் இல்லாமல் தலைவர் பதவிக்கான தேர்தல்ஒத்திவைக்கப்பட்டது.
அதுகுறித்து திருமாவளவன் என்னிடம் பேசினார். எந்தக் கட்சி என்பது முக்கியமில்லை. ஒரு ஆதி திராவிடர்மாவட்ட ஊராட்சித் தலைவர் பொறுப்புக்கு வருவது தடைபடக் கூடாது. எனவே அதிமுக வேட்பாளராயினும்அவருக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று உறுதி கூறியிருக்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications