தமிழ் வழக்கு மொழி: உயர்நீதிமன்றம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை ஆக்குவதற்கு முன்பு அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஆராய வேண்டியது அவசியம் என்று கூறித்தான் முதல்வர் கருணாநிதிக்கு தலைமைநீதிபதி ஏ.பி.ஷா கடிதம் எழுதியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் விளக்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் வழக்கு மொழியாக தமிழ் ஆக்கப்படும் என சமீபத்தில்முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்த நிலையில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முதல்வர் கருணாநிதிக்கு ஒருகடிதம் எழுதியிருந்தார்.

அதில் தமிழை வழக்கு மொழியாக ஏற்க சம்மதம் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்துதற்போது உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:

இந்த விஷயம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தவறாக செய்திகள் வந்துள்ளன. இந்தத் திட்டம்தொடர்பாக உயர்நிதீமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், தொலை நோக்குப் பார்வையுடன் அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து பார்த்து நீதிமன்றத்தில் அலுவல்மொழியாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும்.

அதை விடுத்து அவசரமாக இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும். அதன்விளைவாக மக்களுக்கு அநீதி ஏற்படும் என கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வழக்கு ஆவணங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குமொழிபெயர்ப்பு செய்ய பயிற்சி பெற்ற மொழி பெயர்ப்பாளர்கள் தேவை. மொழிபெயர்க்கும்போது அசல்ஆவணத்தில் உள்ள அனைத்து அம்சங்களும், அதன் தன்மை மாறாமல் அப்படியே மொழி பெயர்க்க முடியாது.

ஆவணங்களை அப்படியே மொழிபெயர்த்தால் அதன் விளைவு வேறு விதமாக இருக்கும். தவறாக மொழிபெயர்ப்பு செய்து விட்டால் அது கட்சிக்காரரின் வாழ்க்கைக்கும் தனி மனித உரிமைக்கும் ஆபத்தாகி விடும்.எனவே நீதித்துறை மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தலை சிறந்த மொழிபெயர்ப்பாளர்களைநியமிக்க வேண்டும்.

அதேபோல பயிற்சி பெற்ற தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தாளர்கள் தேவை. அதே மாதிரி தமிழில் சட்டபபுத்தகங்கள் இல்லை. சில சட்டப் புத்தகங்களே உள்ளன. எனவே இரண்டு மொழியிலும் புலமை பெற்றசுருக்கெழுத்தாளர்கள் கண்டிப்பாக தேவை.

அதேபோல தமிழில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க தமிழ் கம்ப்யூட்டர் ஹார்டுவேர்கள், சாப்ட்வேர்கள் தேவை.அனைத்து சட்டங்களையும் தமிழ்ப்படுத்தி முடிக்கும் வரை நீதிமன்ற நடவடிக்கைகளை தமிழில் மேற்கொள்ளமுடியாது.

தமிழ் நூலகம் அமைப்பதற்கு தேவையான உட் கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். தமிழ் சட்டப்புத்தகங்கள், சட்ட இதழ்கள் வாங்க வேண்டும். சட்டம் மற்றும் முதுமொழி சொற்கள் உள்பட அனைத்து சட்டசொற்களும் தமிழில் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து வசதிகளையும் செய்தால்தான் தமிழை முழுமாையன ஆட்சி மொழியாக கொண்டுவர முடியும்.

இந்தத் திட்டம் தொடர்பாக அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது அனைத்துநீதிபதிகளும் இந்தத் திட்டத்தை கொள்கை அளவில் ஒப்புக் கொண்டனர். அதே நேரத்தில் உட்கட்டமைப்புவசதிகள் செய்து கொடுக்காமல் செயல்படுத்துவது தொடர்பாக அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348 (2)ன் கீழ்அறிவிக்கை வெளியிட முயற்சி செய்தால் திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறாது என்றுகூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+