சுகன்யா கொலைக்கு ஆதாரம்: வக்கீல்கள் குழு

Subscribe to Oneindia Tamil

சேலம்:ஓமலூர் பாத்திமா மகளிர் கல்லூரியில் படித்து வந்த பிளஸ்டூ மாணவி சுகன்யா தற்கொலை செய்யவில்லை. அவர்கொலை செய்யப்பட்டார். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அதுகுறித்து ஆய்வு செய்த உண்மை அறியும்குழு கூறியுள்ளது.

ஓமலூர் பாத்திமா மகளிர் மேல் நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி சுகன்யாகடந்த 18ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.

இதைத் தொடர்ந்து ஊர் மக்கள் கொதிப்படைந்து பள்ளிக்கூடத்தை சூறையாடினர். மாணவி சாவுக்கு பள்ளிநிர்வாகமே காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஊழியர்கள் இருவர்கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக 30 பேர் கைதாகியுள்ளனர்.

மாணவி சுகன்யா கற்பழிக்கப்படவில்லை என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இச்சம்பவம் குறித்த உண்மை நிலையை அறிய தமிழ்நாடு குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ் தேசியவக்கீல்கள் நடுவம் உள்ளிட்ட சில அமைப்புகளின் சார்பில் உண்மை நிலை அறியும் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் விசாரணை நடத்தி தங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கண்டெடுக்கப்பட்ட கசங்கிய பூச்சரம், உடைந்த வளையல் துண்டுகள்,ரத்தக்கறை, பள்ளி வளாகத்தில் காணப்பட்ட ஆணுறைகள், உயர் ரக மது பாட்டில்கள், பான்பராக், கிருஷ்ணகிரி,புதுச்சேரியில் இருந்து இரவில் வந்து போகும் பாதிரியார்களின் நடவடிக்கைகள் குறித்து இரவுக் காவலாளி அருள்நாயகம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அருள்நாயகம் குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் பார்க்கும்போதுபாதுகாப்பற்ற முறையில் அப்பள்ளி விடுதியில் மாணவிகள் தங்கிப் படித்துள்ளது தெளிவாகிறது. பலர்தொடர்ச்சியான பாலியல் தொல்லைகளுக்கு ஆட்பட்டு வந்திருக்கிறார்கள்.

இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலே மாணவியின் மரணத்திற்கு வழி வகுத்துள்ளது எனத் தெரிய வருகிறது.

எமது குழுவுக்கு கிடைத்த பல ஆதாரங்கள் மற்றும் பலத்த பாதுகாப்புடன் சுகன்யாவின் உடலை எரிக்கஅச்சுறுத்திய, நிர்பந்தித்த காவல்துறையினரின் போக்கு, சாட்சிகளின் வாக்குமூலம் ஆகியவற்றைப்பார்க்கும்போது மாணவி சுகன்யா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற முடிவுக்குஉண்மை அறியும் குழு வருகிறது.

இந்த நிலையில் கீழ்க்கண்ட பரிந்துரைகளை நிறைவேற்ற குழு கோருகிறது.

மாணவி சுகன்யாவின் கொலைப் பின்னணியைக் கண்டறிய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டவிசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.

பள்ளி மற்றும் விடுதியின் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்.

சுகன்யா மற்றும் இதற்கு முன்பு இறந்து போன பல மாணவிகளின் மரணத்திற்குக் காரணமான நிர்வாகத்தினரைஉடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.

சிறுபான்மையினர் இதுபோல நடத்தும் நிறுவனங்களில் இப்படிப்பட்ட முறைகேடுகள் எதிர்காலத்தில்நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் நடத்தும் போராட்டத்தை ஒட்டுமொத்த சிறுபான்மையினர்எதிர்ப்பு போராட்டமாக சித்தரிப்பது மிகத் தவறான போக்காகும்.

சுகன்யா மற்றும் ஏற்கனவே இறந்து போன மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாத்திமா பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள 17கத்தோலிக்க மறை மாவட்டதலைமை அலுவலகங்கள் முன்பு கிறிஸ்தவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம்நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+