திருப்பதி கோவிலில் 300 தங்கக் காசுகள் மாயம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:திருப்பதி வெங்காடசலபதி கோவிலில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 13லட்சம் மதிப்புள்ள 300 தங்கக் காசுகளை காணவில்லை. இதுதொடர்பாக தேவஸ்தான ஊழியர் ஒருவர்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக வெங்கடாசலபதி, பத்மாவதி தாயார்படங்கள் அடங்கிய தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் இருப்பை எண்ணிப் பார்த்தபோது, அதில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள 300 தங்கக் காசுகள் காணவில்லைஎன்பது தெரிந்தது. இதையடுத்து தேவஸ்தான ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரபலமான திருப்பதி கோவிலில் தங்கக்காசுகள் திருடு போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications