இன்று திருவண்ணாமலை மகா தீபம்
திருவண்ணாமலை:புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது.இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
அக்னி தலமான திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திருவிழாஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இன்று மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சிநடைபெறுகிறது. நேற்று நள்ளிரவில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார,அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதிகாலை 4 மணிக்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம்ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தவண்ணம்உள்ளனர்.
மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலை நகரம் விளக்குகளால் ஜொலித்து வருகிறது. மகா தீபநிகழ்ச்சியையொட்டி சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் விடப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதேபோல மதுரை திருப்பரங்குன்றம், சென்னை வல்லக்கோட்டை முருகன் திருக்கோவில் ஆகிய இடங்களிலும்இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications