டெல்லியில் ஆளுநர்: உ.பி. அரசு கலைப்பு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:உத்தரப் பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மாநில ஆளுநர் ராஜேஷ்வர், மத்திய உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீலுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இதனால் உ.பி. மாநில அரசு கலைக்கப்படும்என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

உ.பி.மாநிலம் கான்பூரில் சமீபத்தில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்டது. இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில்பெரும் கலவரம் ஏற்பட்டது. 2 ரயில்கள் எரிக்கப்பட்டன, நூற்றுக்கணக்கான பேருந்துகள் தாக்கப்பட்டன.துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் உ.பி. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறுகட்சிகள் கூறி வருகின்றன. இங்கு முலாயம் சிங் யாதவ் தலைமையிலான ஆட்சியைக் கலைத்து விட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த நிலையில், உ.பி.மாநில ஆளுநர் ராஜேஷ்வர் இன்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன்அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அவர் பாட்டீலிடம் அறிக்கைவழங்கியதாக தெரிகிறது.

இதற்கிடையே பாஜக தலைவர்கள் அடங்கிய குழு இன்று மாலை குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்துஉ.பி. மாநில அரசைக் கலைக்க கோரிக்கை விடுக்கவுள்ளது.

இதனால் முலாயம் சிங் யாதவ் அரசு கலைக்கப்படும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் டெல்லியிலும்,உ.பி. மாநில அரசியலிலும் பரபரப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+