5வது போட்டியிலும் தோல்வி-இந்தியா சுத்தம்
செஞ்சூரியன்:தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி அபாரமான தோல்வியைத்தழுவியது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள்தொடரில் ஆடியது. இதில் முதல் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. பின்னர் முதல் 3 போட்டிகளிலும்இந்தியா பெரும் தோல்வியை சந்தித்து தொடரை இழந்தது.
இந்த நிலையில் 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. கேப்டன் டிராவிட்டுக்குப் பதில்அவசரம் அவசரமாக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட வி.வி.எஸ்.லட்சுமண் நேற்றைய போட்டியில்விளையாடினார்.
இந்தியா முதலில் பேட் செய்தது. ஷேவாக்கும், டெண்டுல்கரும் ஆட்டத்தைத் தொடங்கினர். வழக்கம் போலஷேவாக் 11 ரன்களில் ஆட்டமிழந்து வேகமாக பெவிலியன் திரும்பி விட்டார். டெண்டுல்கர் படு நிதானமாகஆடி வந்தார்.
லட்சுமன் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி திரும்பினார். பின்னர் டெண்டுல்கரும், திணேஷமோங்கியாவும் இணைந்து மெதுவாக ஆடத் தொடங்கினர். இருவரும் சிறிது நேரம் கட்டையைப் போட்டுஅணியின் சரிவை நிறுத்திப் பார்த்தனர்.
டெண்டுல்கரும், மோங்கியாவும் இணைந்து 85 ரன்களை சேர்த்தனர். இந்த நிலையில் படு நிதானமாக ஆடி வந்தடெண்டுல்கர் 97 பந்துகளைச் சந்தித்து 55 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் மோங்கியாவும், டோணியும் இணைந்து ஆடினர். டோணி அதிரடியாக ஆடி44 ரன்களை எடுத்தார்.
மறு முனையில் படு நிதானமாக ஆடி வந்த மோங்கியாவும் 41 ரன்னிலும் வெளியேறினார். இவர்கள் போனபின்னர் வந்த வீர்ரகள் பெரிய அளவில் ஆடவில்லை.
ஜாகிர்கான் 16 ரன்களும், திணேஷ் கார்த்திக் 11 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்தியஅணி 200 ரன்களைச் சேர்த்தது. இந்தத் தொடரிலேயே இப்போட்டியில்தான் இந்திய அணி 50 ஓவர்களும் நின்றுஆடியதுஎன்பது வருத்தத்திற்கு ஆறுதல் விஷயம்.
201 என்ற எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. கடந்த 3போட்டிகளிலும் சரியாக விளையாடாத கேப்டன் ஸ்மித் படு ஆவேசமாக நேற்று ஆடி 79 ரன்களைக் குவித்துஇந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
அவரது விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து ரன் குவிப்பில்ஈடுபட்டார் ஸ்மித். இறுதியில் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்குத் துணையாக ஜோடி போட்டு ஆடியடிவில்லியர்ஸ் படுஅபாரமாக ஆடி 92 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். போலக் 16 ரன்களுடன்ஆட்டமிழக்காமல் இருந்தார்.
31.2 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்து இந்தியாவைவீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் நான்கு ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவுக்குவெள்ளை அடித்து விட்டது தென் ஆப்பிரிக்கா.
இரு அணிகளும் பங்கேறும் டெஸ்ட் தொடர் வருகிற 15ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டிஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. இதில் விளையாடும் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கங்குலிபங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications