குமாரசாமி எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்
மைசூர்:கர்நாடக மாநிலம் சாமுண்டீஸ்வரி சட்டசபைத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்தது.
2004ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தேவே கெளடாவின் மதசார்பற்றஜனதாதளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார் சித்தராமையா. இதையடுத்து அமைந்தகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசில் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தனது மகன் குமாரசாமியை முதல்வராக்க தேவே கெளடாமுயன்றபோது எதிர்ப்புத் தெரிவித்தார் சித்தராமையா. இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் கெளடா.இதைத் தொடர்ந்து காங்கரஸ் கட்சியில் இணைந்த சித்தராமையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந் தேர்தலில் 14 பேர்போட்டியிடுகிறார்கள். இத் தேர்தலில் 14 பேர் போட்டியிட்டாலும் காங்கிரஸ் வோட்பாளர் சித்தராமையா,மதசார்பற்ற ஜனதாதளம் வேட்பாளர் சிவபசப்பவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இத் தொகுதியில் பாஜகவும் போட்டியிட திட்டமிட்டது. இதனால் கெளடா-பாஜக இடையே மோதல் ஏற்பட்டது.இறுதியில் தொகுதியை கெளடா கட்சிக்கு பாஜக விட்டுத் தந்தது.
இடைத் தேர்தலையொட்டி நடந்த பிரசாரத்தின் போது காங்கிரஸ், ஜனதா தளம் கட்சியினருக்கும் இடையேபலமுறை மோதல் ஏற்பட்டது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் பிரசாரம் முடிவடைந்தது.
தமிழக ஸ்டைலில் வாக்காளர்களுக்கு டிபன் கேரியர் உள்ளிட்ட அன்பளிப்புகளை அள்ளிவிட்டார் முதல்வர்குமாரசாமி. மேலும் பணமும் மதுவும் புகுந்து விளையாடியது.
தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக குமாரசாமிக்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமி, எதிர்கட்சி தலைவர் தரம்சிங் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தொகுதியைவிட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால், குமாரசாமி அங்கு ஒரு பண்ணை வீட்டில் பதுங்கியிருந்து தேர்தல் வேலைகளைப் பார்த்தார். இதைபத்திரிக்கையாளர்கள் அறிந்து படம் எடுத்தபோது காரில் ஏறி ஓடினார். ஒரு முதல்வரே தப்பியோடியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந் நிலையில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் இன்று காலை 7 வாக்கு பதிவு தொடங்கியது. மின்னனு எந்திரம்மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
இந்தத் தேர்தலின் எதிரொலி மாநில பாஜக-ஜனதா தள கூட்டணியின் ஆட்சியிலும் எதிரொலிக்கும் என்பதால்இந்தத் தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கர்நாடகத்தில் உத்திரஹள்ளிக்கு அடுத்த 2வது பெரிய சட்டசபை தொகுதியாக கருதப்படுவது சாமுண்டீஸ்வரிதொகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
6,000 போலீசார் குவிப்பு:
தொகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் அமைதியான முறையில் நடைபெற 7 கம்பெனி துணை ராணுவ போலீசார் வரவழைக்கப்படுள்ளனர்.மேலும் கர்நாடக ஆயுதப்படை, ரிசர்வ் போலீசார் உள்பட 6,000 போலீசார் குவிக்கப்பட்டள்ளனார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications