பெரியாறு: உடும்புப் பிடி வேண்டும் - பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள முதல்வரைப் போல நமது பிடியும்உடும்புப் பிடியாக இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர்டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டெல்லிபேச்சுவார்த்தைக்குப் போய் விட்டுத் திரும்பிய முதல்வர் கருணாநிதி, கேரளமுதல்வரின் பிடி உடும்புப் பிடியாக இருப்பதாக கூறினார். ஆனால் தமிழக அரசு அந்தஅளவுக்கு உறுதியாக இல்லையோ என சந்தேகப்பட வேண்டியுள்ளது. நமது பிடியும்அதை விட உறுதியாக இருக்க வேண்டும்.

இரு மாநில முதல்வர்கள் சந்தித்துப் பேசிய பிறகும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகிடைக்கவில்லை. இது 65 லட்சம் மக்கள், 4 மாவட்டங்கள், 2 லட்சத்து 15 ஆயிரம்ஏக்கர் விவசாய நிலம் சம்பந்தப்பட்ட மிகப் பெரிய பிரச்சினை.

முல்லைப் பெரியாறு பிரச்சினையை சோனியா காந்தியிடம் விட்டு விட்டதாககூறியுள்ளார் கருணாநிதி. தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.எல்.ஏக்களும், புதுவையைச்சேர்ந்த ஒரு எம்.பியையும் தமிழக மக்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கேகொடுத்துள்ளனர். இந்த 40 பேரும் காங்கிரஸுக்கு ஆதரவு தருகின்றனர்.

ஆனால் இதுவரை இந்தப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் கட்சி வாயேதிறக்கவில்லை. பதில் வந்திருக்க வேண்டாமா? ஆனால் வரவில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தேசியக் கட்சிகள் ஏமாற்றி விட்டதாகவும்,இனிமேல் அவர்கள் ஓட்டு கேட்டு வந்தால் போடாதீர்கள் எனவும் விஜயகாந்த்பேசுகிறார். இப்படிப் பேசுவது அவரது அரசியல் திர்ச்சியின்மையைத்தான்காட்டுகிறது.

இப்படிப்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டுதான் நதிகளை தேசியமயமாக்கும்மிகப் பெரிய திட்டத்தை வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்தது.நாட்டில் உள்ள சாலைகளை இணைத்தது வாஜ்பாய்தான். மீண்டும் பாஜக ஆட்சிக்குவந்திருந்தால் நதிகள் இணைப்புத் திட்டம் தொடங்கியிருக்கும்.

இப்படித் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தந்த பாஜகவை விஜயகாந்த்ஏன் வம்புக்கு இழுக்கிறார்? பிரச்சினைக்கு தீர்வு சொல்வதுதான் சரியானஅணுகுமுறை. அதை விட்டு விட்டு பொத்தாம் பொதுவாக கருத்து கூறுவது சரியாகஇருக்காது.

விஜயகாந்த் கட்சி என்ன கட்சி? அவரது கட்சி தேசியக் கட்சியா, திராவிடக் கட்சியா?இதை முதலில் அவர் தெளிவாக்கட்டும் என்றார் தமிழிசை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+