சட்டசபையில் அதிமுகவை தாக்கிய காங் எம்எல்ஏ
சென்னை:அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை என காங்கிரஸ் எம்எல்ஏ கோவை தங்கம்சட்டசபையில் கூறினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டனர்.
கேள்வி நேரத்தில் கோவை தங்கம் பேசியதாவது:
விவசாயிகள் காலையில் பத்திரிகை படிக்க நேரம் கிடைப்பதில்லை. எனவே அரசின் திட்டங்களை விவசாயிகள்தெரிந்து கொள்ள பழையபடி திரைப்படமாக தயாரித்து வெளியிட்டால் தான் அரசு திட்டங்கள் கிராமப்புறவிவசாயிகளை சென்றடையும்.
ரூ. 7,000 கோடி கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளுக்கு மாபெரும் நன்மை செய்திருக்கிறார் நமது முதல்வர்.பயிர்க்கடன் வட்டியை 7 சதவீதமாகக் குறைத்திருக்கிறார். விவசாயிகளைப் பாதுகாக்க நல்ல பல திட்டங்களைதீட்டி இருக்கிறார். அதிமுக ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் வேலுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், விஸ்நாதன் மற்றும் பாண்டுரங்கன்உள்பட பல அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
மீண்டும் கோவை தங்கம் பேசுகையில், கிலோ அரிசி 2 ரூபாய், இலவச கலர் டிவி, இலவச கியாஸ் இணைப்பு எனநல்ல பணிகளை கலைஞர் அரசு செய்து கொண்டிருக்கிறது. காமராஜர் ஆட்சியில் அணைகள் கட்டப்பட்டன.பள்ளிகள் திறக்கப்பட்டன, சத்துணவு போடப்பட்டது.
மக்களுக்கு பல நல்ல பணிகள் செய்தும், அந்த பணிகள் பற்றி மக்களுக்கு தெளிவாக தெரிவிக்காததால் தான்நாங்கள் ஆட்சியில் இல்லாமல் இருக்கிறோம். இன்று சிறப்பாக ஆட்சி நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாகவால்பாறைக்கு கல்லூரி கேட்டோம். கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அந்த கோரிக்கை நிறைவேறியுள்ளதுஎன்றார்.
தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று கத்தினர்.
அப்போது அமைச்சர் பரிதி இளம்வழுதி எழுந்து. உறுப்பினர் கோவை தங்கம் அவர்களே, கேள்வி நேரத்தில்கேள்வி கேளுங்கள் குற்றம் சொல்லாதீர்கள். நலத்திட்டங்களை திரைப்படமாக தயாரித்து காண்பிக்க முடியுமாஎன்று கேட்கிறார். திரைப்படமாக காட்டினால் தியேட்டருக்கு சென்று தான் மக்கள் பார்க்க முடியும். இந்தக்குறையை நீக்க வீடியோ படமாக தயாரித்து மக்கள் கூடும் இடத்திற்கெல்லாம் சென்று நாங்கள் ஒளிபரப்பிவருகிறோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications