விளங்க முடியா கவிதை ரமேஷ்பாபு

Subscribe to Oneindia Tamil

Ramesh Babuசென்னை:பரங்கிமலை மேல் உள்ள சர்ச் வளாகத்தில் சமீபத்தில் நடந்த கொலை தொடர்பாக கைதாகியுள்ள சைக்கோ சாமிரமேஷ் பாபுவின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீஸார் இப்போது படு தீவிரமாக விசாரிக்கஆரம்பித்துள்ளனர்.

பரங்கிமலையின் மீது அமர்ந்துதான் இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையர் (செயின்ட் தாமஸ்)கிறிஸ்தவ மதப் பிரசாரத்தை மேற்கொண்டார். கி.பி. 72ம் ஆண்டு அவரை ஈட்டியால் குத்தி ஒருவர் கொலைசெய்தார். அதன் பிறகு இப்போது மீண்டும் ஒரு அப்பாவியின் ரத்தம் பரங்கிமலையை நடுங்க வைத்துள்ளது.

நவம்பர் 26ம் தேதி சர்ச் வளாகத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையத்தின் மேலாளரான ஜேக்கப்பை ஒரு நபர்வெறித்தனமாக குத்திக் கொன்றான். மாலையில் நடந்த கொடூரக் கொலை, பல நூறு பக்தர்கள் முன்னிலையில்நடந்ததுதான் பலரையும் பதை பதைக்க வைத்துள்ளது.

Ramesh Babus College IDகிருஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும் வந்து சேரும் பேராலாயம்தான் புனித தோமையர்பேராலயம். கொலையாளியை போலீஸார் அடுத்த நாளே ஆதம்பாக்கம் பகுதியில் வைத்துப் பிடித்து விட்டனர்.பிடிபட்டவன் பெயர் ரமேஷ்பாபு.

நான் தான் கல்கி பகவான் என்று கூறிக் கொண்டு திரியும் இந்த ரமேஷ்பாபுவிடம் போலீஸார் விசாரித்தபோது பலவினோதமான தகவல்கள் கிடைக்கவே, போலீஸாருக்கு மண்டை காய்ந்து போய் விட்டது. ரமேஷ் பாபு கூறியதகவல்களை வைத்து அவரை சைக்கோ என்று நினைப்பதா அல்லது அவருக்குப் பின்னணியில் ஏதாவது சதித்திட்டம் இருக்குமா என்று முடிவு செய்ய முடியாமல் குழம்பிப் போனது போலீஸ்.

ரமேஷ்பாபு கூறிய தகவல்கள் அப்படி இருந்தன. ஆதம்பாக்கத்தில் மெய்நெறி சநாதன தர்ம ஸ்தபானம் என்றஅமைப்பை வைத்துள்ளான் ரமேஷ் பாபு. இதற்காக இணையதளம் ஒன்றையும் அவன் வடிவமைத்துள்ளான்.தனது வீட்டிலேயே இந்த அமைப்பின் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளான் பாபு.

Ramesh Babus Employer IDஅப்பகுதியினருக்கு ரமேஷ் பாபு என்றாலே டெர்ரர்தான். அந்த அளவுக்கு படு மிரட்டலாக இருந்துள்ளான்ரமேஷ் பாபு. வீடு உள்ள தெருவில் வாசலில் யாரும் நிற்கக் கூடாதாம். தான் வெளியே நடக்கும்போது யாராவதுஎதிரே வந்து விட்டால் அவ்வளவுதான் கல்கி பகவான் வரும்போது எதிரில் வருவதா என்று கோபமாககத்துவானாம்.

அதேபோல பெண்களைக் கண்டாலும் ரமேஷுக்குப் பிடிக்காதாம். இரவெல்லாம் ரமேஷின் வீட்டிலிருந்துஅசுரர்களை வதம் பண்ண வந்திருக்கு கல்கி பகவான் நான்தான் என்று கத்திக் கொண்டே இருப்பானாம்.

சரிதான், சரியான கிராக்கு போல என அப்பகுதியில் ரமேஷ்பாபுவைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துகண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் பயங்கர கொலையைச் செய்வான் ரமேஷ் பாபு என அவர்கள் யாருமேநினைத்துக் கூட பார்க்கவில்லையாம்.

Ramesh Babus Employer ID2005ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மெய்நெறி என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளான் ரமேஷ் பாபு. இதையடுத்துஅந்த அமைப்புக்கு ஆள் பிடிப்பதற்காக வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்துள்ளான். அரசியல்வாதிகள், நடிகர்,நடிகையர் எல்லாம் அசுரர்கள். இவர்கள் எல்லோரையும் நான் வதம் செய்யப் போகிறேன். அதுக்காகத்தான் இந்தமெய்நெறி அமைப்பு. என்னுடன் வாருங்கள், மெய் நெறி அமைப்பை வலுப்படுத்துங்கள் என்று கூற ஏதோபைத்தியம் போல என நினைத்து ரமேஷைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.

ஆனாலும் தனது மெய்நெறி அமைப்பு குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்தவண்ணம் இருந்தான் ரமேஷ்பாபு.தனது பைக்கிலும் மெய்நெறி அமைப்பின் சின்னத்தைப் பொறித்து வைத்திருந்தான்.

இப்படித் திரிந்த ரமேஷ்பாபுதான் பரங்கிமலை சர்ச் வளாகத்தில் படுகொலையை செய்துள்ளான். அவனைபோலீஸார் பிடித்தபோது முரண்டு பிடிக்கவில்லையாம். மாறாக, கொலை செய்ய தான் பயன்படுத்திய கத்தியைஅவனாகவே போலீஸிடம் எடுத்துக் கொடுத்தானாம்.

இப்படி ஒரு ஆளை பார்த்ததே இல்லை என்று அவனைக் கைது செய்த ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீஸார்ஆச்சரியமாக கூறுகின்றனர். காவல் நிலையத்தில் இருந்தபோது யாருடனும் பேசாமல் இருந்தானாம். சாப்பாடுகொடுத்தபோது ஒரு இட்லியை மட்டும் சாப்பிட்டு விட்டு அப்படியே இருந்தானாம்.

யோகா போஸில், லாக்கப்பில் இருந்த அவன் காலையில் டிபன் ஏதும் சாப்பிடவில்லையாம். மாறாக ஒரே ஒரு டீமட்டும் குடித்தானாம். அவனை ஒரு சைக்கோ என்றுதான் போலீஸார் முடிவு செய்திருந்தனர் முதலில். ஆனால்பரங்கிமலை சர்ச் தரப்பில் இதற்குப் பெரிய பின்னணி இருக்கலாம் என சந்தேகம் கிளப்பப்பட்டதால் இப்போதுரமேஷ் பாபுவின் பின்னணி குறித்து போலீஸார் குடையத் தொடங்கியுள்ளனராம்.

இந்த விவகாரம் குறித்து சர்ச் வட்டாரத்தில் கூறுகையில், ரமேஷ் பாபுவின் பின்னணியில் பஜ்ரங் தள், இந்துமுன்னணி போன்ற அமைப்புகள் உள்ளன என்கின்றனர்.

ஜேக்கப்பைக் கொன்ற பின்னர் சர்ச்சுக்குள் நுழைந்த ரமேஷ்பாபு, அங்கிருந்த இரு சிலைகளை சேதப்படுத்திஅவற்றின் மீது ஜேக்கப்பின் ரத்தத்தை தெளித்துள்ளான்.

ஜேக்கப்பின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு நடந்த திருப்பலியின்போதும் சிலர் திடீரென அங்குவந்து ஜெய் பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷமிட்டுவிட்டு ஓடியுள்ளனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தக் கொலைக்குப் பின் மிகப் பெரிய சதித் திட்டம் இருப்பதாகசந்தேகப்படுகிறோம். பாதிரியார்களை கொல்லவே ரமேஷ்பாபு வந்திருக்கக் கூடும் என கருதுகிறோம்என்கின்றனர் சர்ச் நிர்வாகிகள்.

இதை பாதிரியார் ஜெயசீலனும் ஆமோதிக்கிறார். இந்த சம்பவத்தின் பின்னணியில் பெரிய கும்பலே இருக்கும்என சந்தேகப்படுகிறோம். புனிதத் தலமான இந்த வளாகத்தில் இப்படி ஒரு கொலை நடந்திருப்பது வேதனைதருகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து, மோதலையும், வெறுப்பையும் உருவாக்க சில சக்திகள்முயற்சிப்பதைத் தடுக்க வேண்டும் என்கிறார்.

இந்த சந்தேகத்தால் தற்போது ரமேஷ்பாபுவின் மெய்நெறி இயக்கம், அவனது பின்னணி, அந்த அமைப்பில் யார்யார் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

அடர்ந்த தாடியும், முறுக்கு மீசையும், தலையில் ரிப்பன் கட்டியும் படு வித்தியாசமாக காணப்படும் ரமேஷ்பாபுசாதாரண ஆள் இல்லை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில்மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துள்ளார் ரமேஷ் பாபு.

இவர் பிறந்தது வாணியம்பாடியில். ஆனால் சிறுவயது முதலே வளர்ந்தது ஆதம்பாக்கத்தில்தான். 1991ல்படிப்பை முடித்த ரமேஷ்பாபு, 2000ம் ஆண்டு வரை வேலை பார்த்துள்ளார்.

பின்னர் பிரான்ஸ் நாட்டின் சாய்பெம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்த சமயத்தில், 2004ம்ஆண்டின் பிற்பகுதியில்தான் தனது புதிய பாதைக்குத் திரும்பியுள்ளார் ரமேஷ்பாபு.

மெய்நெறி என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக இணையதளம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இதில்அசுராந்தத்திற்கு எதிரான தனது போர் என்று குறிப்பிட்டுள்ளார். அசுராந்தம் என்பது அசுரர்களின் உச்ச குணம்.இதை எதிர்த்தே தனது போர் என்று கூறுகிறார் ரமேஷ்பாபு.

மனித சமூகத்தின் அனைத்துப் பிரிவிலும் அசுரத்தனம் ஊடுறுவியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் ரமேஷ். அதைஅழிக்கத்தான் இந்தப் போர் என்றும் முழங்கியுள்ளார். தனது அசுர வதத்தில் அனைவரும் கூட நின்று உதவவேண்டும் என்று இணையதளம் மூலம் அழைப்பு விட்டுள்ளார் ரமேஷ்பாபு.

ரமேஷ்பாபுவின் இலக்கு, அவரது போக்கு, கடைசியில் செய்த கொலை எல்லாமே ஒன்றும் புரியாதகுழப்பமாகவே உள்ளன. ஆளவந்தானில் கமல்ஹாசன் பாடுவது போல ரமேஷ்பாபு ஒரு விளங்க முடியாகவிதை!

ரமேஷ்பாபுவின் பின்னணியை காவல்துறை தெளிவாக விளக்கினால் மத மோதல்களையும், துவேஷத்தையும்,வருத்தத்தையும் போக்க பெரும் உதவியாக இருக்கும்.

கிராக்கு ரமேஷ்பாவுவின் இணையதள முகவரி:

http://00a66e4.netsolhost.com/home.htm

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+