கேரளாவுடன் பகை வேண்டாம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:முல்லை பெரியாறு அணை பேச்சுவார்த்தையில் கேரளத்துடன் பகை கொள்ளவிரும்பவில்லை என முதல்வர் கருணாநிதி கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கிளப்பினார்அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம். இது தொடர்பாக நடந்த காரசாரமான விவாதத்துக்குபதிலளித்து கருணாநிதி பேசியதாவது:

எதிர்க் கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எதை விரும்பினாரோ அது இன்றுநிறைவேறிவிட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சனை நிறைவேறுகிறதோ இல்லையோஅந்தப் பிரச்சனை குறித்து இன்று விவாதித்தே தீர வேண்டும் என விரும்பியது, அவர்அறியாமல், நாம் அறியாமல் பொதுவாக நிறைவேறிவிட்ட மகிழ்ச்சி எனக்கும்இருக்கிறது.

இந்த விவகாரத்தில் இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக, கேரளத்தை ஆண்டபல்வேறு முதல்வர்களையெல்லாம் நாம் சந்தித்து பேச்சு நடத்தியிருக்கிறோம்.

முல்லைப் பெரியாறு மாத்திரமல்ல, பரம்பிக்குளம் ஆழியாறு உள்ளிட்ட பலதாவாக்களை பேசித் தீர்த்திருக்கிறோம். கோவைக்கு சிறுவாணி நீர் வேண்டும் என்றகோரிக்கையை ஏற்று அன்றைய கேரள முதல்வர் அச்சுதமேனன் அவரே கோவைக்குவந்து தண்ணீர் வினியோக தொடக்க விழாவை நடத்தி வைத்தார் என்பதெல்லாம்கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவை எடுத்துக் காட்டும் சரித்திர சான்றுகள்.

இந்த சரித்திர குறிப்புகளை தான் நான் டெல்லி பேச்சுவார்த்தையின்போதுநினைவூட்டினேன். அப்படி நினைவூட்டியதற்குக் காரணம் கேரள மக்களும்தமிழர்களும் சகோதரர்களாக வாழ வேண்டும், ஒருமைப்பாடு போற்றப்படவேண்டும், ஒற்றுமை நிலவ வேண்டும், காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுவிட இடம் தரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான்.

டெல்லியில் நாங்கள் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு சென்னைக்குவருவதற்குள்ளாகவே இங்கிருந்து வெளிவரும் சில பத்திரிக்கைகளில் பேச்சுவார்த்தைதோல்வி என்று வெளியிடப்பட்டுவிட்டது. உள்ளபடியே அது தோல்வி அல்ல.

மீண்டும் ஒருமுறை அம் மாநில பாசன அமைச்சரும் நமது பொதுப்பணித்துறைஅமைச்சரும் பொறியாளர்களும் கலந்து பேசி, சில புள்ளிவிவரங்களை, சிலதகவல்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் பேச்சுவார்த்தையை இரண்டாவது கட்டமாகநடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் பேச்சு தோல்விஅடைந்துவிட்டதாக பொருள் அல்ல.

நானும் கேரள முதல்வர் அச்சுதானந்தனும் நடத்திய பேச்சுவார்த்தை சில விவரங்களைசேகரிப்பதற்கு முன்னோடியாக, ஒரு தூண்டுகோலாக அமைந்ததே தவிர வேறல்ல.அது முற்றுப்பெற்ற பேச்சுவார்த்தை அல்ல. அது முற்றுப் பெற்ற பேச்சுவார்த்தைஎன்றால் அடுத்த கட்டமாக நாம் உச்ச நீதிமன்றம் தான் சென்றிருக்க வேண்டும்.

அப்படிச் செய்வதற்கு முன் நம் அமைச்சரும் கேரள அமைச்சரும் அதிகாரிகளும்பேச்சு நடத்தி என்னென்ன விவரங்கள், எவ்வளவு தண்ணீர் வருகிறது, எவ்வளவுதண்ணீர் முல்லை பெரியாரில் விடப்படுகிறது, அதை தமிழகம் எந்த அளவுக்குபயன்படுத்துகிறது, எவ்வளவு நிலம், எவ்வளவு கழனி இதன் மூலம் பலனடைகிறதுபோன்ற புள்ளி விவரங்களை பகிர்ந்து கொண்டு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை உதவவேண்டும் என்பதற்காகக் தான் அன்றைய தினம் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதைக் கூட மத்திய நீர் வளத்துறை அமைச்சர் தான் வெளியிட்டு அன்றையபேச்சுவார்த்தையை ஒத்தி வைத்தார். பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே அதுமுடிந்துவிட்டது, முறிந்துவிட்டது, தோற்றுவிட்டது என்று சொன்னது தவறு.

இப்போதும் நாங்கள் பேச்சுவார்த்தையை தொடருவகு என்பது நானும்அச்சுதானந்தனும் மீண்டும் உட்கார்ந்து பேசுவதென்பதல்ல.

பொறியாளர்களும், அமைச்சர்களும் கலந்து பேசி, அவர்கள் ஜாடை காட்டினால் தான்,இப்போது நீங்கள் மீண்டும் பேசினால் வெற்றியடையக் கூடும் என்று அவர்கள்சொன்னால் தான், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுமே அல்லாமல்,இல்லாவிட்டால் அடுத்த பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு தயாராக இருக்காதுஎன்பதை இந்த அவையில் உங்களுக்கு உறுதியளித்துக் கொள்கிறேன்.

பேச்சுவார்த்தை இருக்காது என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், நாம்நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்துக்கு மேலும் வலுவான ஆதாரங்களைத் தந்து தமிழகத்தின் நிலையைசுட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த இரண்டாவது கட்டபேச்சுவார்த்தையை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

இதை நம்முடைய கட்சிகளின் தலைவர்கள் எல்லாம், வேண்டாம் என்று சொல்லிநாளைக்கே ஒரு அறிக்கை தந்தால் அதையேற்று நாளை மறுநாளே உச்சநீதிமன்றத்துக்குச் செல்ல தமிழக அரசு தயாராக இருக்கிறது.

ஏனென்றால் உங்களிடம் பெற்ற அனுமதி, உத்தரவு, கருத்துக்களின் அடிப்படையில்தான் டெல்லியில் சென்று இந்த பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறோம்.

உங்களை நம்பி, நீங்கள் சொன்னதை ஏற்று, நீங்கள் என்றும் இந்த அரசுக்கும், தமிழகமக்களுக்கும் பக்க பலமாக இருப்பீர்கள், தமிழக விவசாயிகளின் எதிர்கால துன்பதுயரங்களைப் பற்றி கவலைப்பட்டு, அதற்கு பரிகாரம் தேட உதவியாக இருப்பீர்கள்என்ற நம்பிக்கையோடு தான் அதையேற்று பணியாற்றினோம்.

அந்தப் பணியில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை. அந்தப் பணி முற்றுப் பெறாமல்இருக்கலாம். ஆனால், முறிந்துவிடவில்லை. முறியாமல் பார்த்துக் கொண்டோம்.

அது மட்டுமல்ல இந்தப் பணி முற்றுப் பெரும்போது முழு வெற்றி பெற்றோம் என்றநிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இது தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இருக்கும் உறவு அடிப்படையிலேயேநடைபெறும் என்று யாராவது நம்புவீர்களோயானால் அது தவறு. நம் பக்கநியாயத்துக்கு மத்திய அரசு தருகி நியாயமான ஆதரவு இது. நியாயம் என்றும்தோற்பதில்லை. தோற்குமேயானால் நம்மையே தியாகம் செய்து நியாயத்தைநிலைநாட்டுவோம்.

இந்த மன்றத்தின் மூலம் கேரள அரசை, கேரள முதல்வரை, கேரள மக்களை கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் உங்கள் பகைவர் அல்ல. நீங்களும் எங்கள் பகைவர் அல்ல.

கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்தேஉதித்தெழுந்து ஒன்று பல ஆயிடினும் என்று மனோன்மனியம் சுந்தரம்பிள்ளை பாடியபாட்டு நம் மனதில் பொதிந்திருக்கிறது. அந்த உணர்வோடு கேரளத்து சகோதரர்களும்தமிழகத்துக்கு சகோதரர்களும் அணுக வேண்டும்.

சில கட்சிகள் நாங்கள் இன்னும் வேகமாக செயல்படவில்லை என்கிறார்கள்.அவர்களை நான் பாராட்டுகிறேன். அப்படித்தான் சொல்ல வேண்டும். ஏன் இவ்வளவுவேகமாக போகிறீர்கள் என்று சில பத்திரிக்கைகள் எழுதுவதைப் போல நீங்களும்சொன்னால் யாரும் எங்களை ஆதரிக்கத் தயாராக இல்லை என்று அர்த்தம்.

பன்னீர்செல்வமோ, செங்கோட்டையனோ, சுதர்சனமோ, பீட்டர் அல்போன்ஸோயாராக இருந்தாலும் நாங்கள் போகும் வேகம் சரியல்ல, இன்னும் வேகமாகப் போகவேண்டும், பணியாற்ற வேண்டும் என்று சொன்னால் தான் எங்களுக்கு ஊக்கம். ஏன்இவ்வளவு வேகமாக போகிறீர்கள் என்று நீங்கள் நியாயம் சொல்வீர்களேயானால்கேரளத்தில் எங்களுக்கு மதிப்பிருக்காது.

இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக சந்தர்ப்பம் ஏற்பட்டமைக்காக, சந்தர்ப்பம்ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+