பெண் போலீஸை தள்ளிக் கொண்டு போன எஸ்ஐ
திருச்சி:திருச்சியில், பணியில் இருந்த பெண் போலீஸை, ராத்திரியில் பைக்கில் அழைத்துச் சென்றார் சப் இன்ஸ்பெக்டர்.இதுகுறித்து விசாரிக்க சென்ற தலைமைக் காவலரை அவர் சரமாரியாக அடித்தார். இந்த சம்பவம் திருச்சிகாவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் அரசுக் கருவூலத்தில் பெண் போலீஸார் இரவுப் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அங்கு ஆயுதப்படை எஸ்ஐ. ஒருவர் வந்துள்ளார். வந்தவர், அங்கு பணியில் இருந்த ஒரு பெண் போலீஸை தனது மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றார்.
சற்று நேரத்தில் ஆயுதப் படை உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்துள்ளார். பணியில் இருந்தவர்களை பார்த்தவர்,ஒரு பெண் போலீஸைக் காணவில்லை என்பதை அறிந்து அவர் எங்கே என்று கேட்டுள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் பைக்கில் குஜாலுக்கு கூட்டிச் சென்ற விவகாரத்தை போலீஸார் தெரிவித்தனர். கோபமடைந்தஅந்த உயர் அதிகாரி, ஒரு தலைமைக் காவலரை அழைத்து எஸ்.ஐ. வீட்டுக்குப் போய் விசாரித்து விட்டு வருமாறுபணித்துள்ளார். அந்த தலைமைக் காவலரும் எஸ்.ஐ வீட்டுக்குப் போனார்.
வீட்டுக் கதவைத் திறந்த எஸ்.ஐ.யின் மனைவி, அவர் வீட்டில் இல்லையே ஊருக்குப் போய் விட்டாரே என்றுகூறியுள்ளார். ஆனால் தலைமைக் காவலருக்கு சந்தேகம வந்தது. வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றுபார்த்தேபாது எஸ்.ஐ. மட்டும் இருந்தார். அதுவும் குடிபோதையில் கிடந்தார்.
தலைமைக் காவலர் வந்த விஷயத்தை அறிந்ததும் கோபமடைந்த எஸ்.ஐ. அவரை கடுமையாகத் திட்டிசரமாரியாக அடித்துள்ளார். காயமடைந்த தலைமைக் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எஸ்.ஐயை அழைத்து விசாரித்தபோது அவருக்கும், அந்த பெண்போலீஸுக்கும் நீண்ட காலமாக தொடர்பு இருந்தது தெரிய வந்தது. விஷயத்தை வெளியே சொன்னால் நாறிப்போய் விடும் என்பதால் அமுக்கி விடத் திட்டமிட்டனர்.
ஆனால் இந்த விவகாரம் மாவட்ட எஸ்.பி. அசோக் குமார் தாஸுக்கு தெரிய வந்தது. இதையடுத்து எஸ்.ஐ, பெண்போலீஸ் மற்றும் அடி வாங்கிய ஏட்டு ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினார். விரைவில் எஸ்.ஐயும்,பெண் போலீஸும் சஸ்பெண்ட் ஆகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணியில் இருந்த பெண் போலீஸை, நள்ளிரவில் வந்து எஸ்.ஐ. தள்ளிக் கொண்டு போன விவகாரம் திருச்சிகாவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications