விண்ணுக்குப் பறக்கும் சுனிதா வில்லியம்ஸ்
ஹூஸ்டன்:கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளிக்குச் செல்லும் 2வது இந்திய வீராங்கனை என்ற பெருமை படைத்தசுனிதா வில்லியம்ஸ் வெள்ளிக்கிழமை விண்வெளிக்குப் பயணமாகிறார்.
![]() |
இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா கடந்த 2003ம் ஆண்டு கொலம்பியா விண்கலம் மூலம் விண்ணுக்குப்பறந்தார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமையைப் படைத்தார்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக விண்ணிலிருந்து பூமிக்குத் திரும்புகையில், கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிகல்பனா சாவ்லா மரணத்தைத் தழுவ நேரிட்டது.
இந்த நிலையில் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு இன்னொரு அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணான சுனிதாவில்லிம்யஸுக்குக் கிடைத்துள்ளது. சுனிதாவின் தந்தை தீபக் பாண்ட்யா, தாயார் உர்சலின் பாண்ட்யா ஆகியோர்இந்தியாவில் பிறந்தவர்கள்.
சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்காவில் பிறந்து புளோரிடா தொழில்நுட்பக் கழகத்தில் எம்.எஸ். பட்டம் படித்தவர்.சுனிதா உள்ளிட்ட விண்வெளி ஆய்வாளர்களை சுமந்து கொண்டு டிஸ்கவரி ஓடம் வருகிற வெள்ளிக்கிழமைவிண்ணுக்குப் பயணமாகிறது.
அங்குள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சுனிதா 6 மாதம் தங்கி ஆய்வில் ஈடுபடவுள்ளார். சுனிதாதவிர மேலும் 6 பேரும் டிஸ்கவரியில் பயணிக்கவுள்ளனர்.
தனது விண்பயணம் குறித்து சுனிதா கூறுகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான் விண்ணுக்கப்பயணமாவதை இந்திய மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் என நினைக்கிறேன். எனக்கும் இதுபெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications