சென்னை பல்கலையில் வேலைவாய்ப்பு திருவிழா
சென்னை:டிசிஎஸ், அசெஞ்சர், ஐசிஐசிஐ உள்பட 11 நிறுவனங்கள் சென்னை பல்கலைக்கழத்தில் வரும் 16, 17 தேதிகளில்நேர்முக தேர்வை நடத்தி மாணவ, மாணவிகளை வேலைக்குத் தேர்வு செய்யவுள்ளன.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது,
சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 174 கல்லூரிகள் உள்ளன. அந்த கல்லூரிகள் மற்றும்பல்கலைக்கழகத்தின் 1.45 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். வருடத்திற்கு 45,000 பேர் பட்டதாரிகளாகவெளிவருகிறார்கள். அவர்களில் குறைந்தது 20,000 பேருக்காவது வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவிரும்புகிறோம்.
அதற்காக முதன் முறையாக சென்னை பல்கலைக்கழகத்தில் நேர்முக தேர்வு 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறஉள்ளது. இந்த நேர்முக தேர்வில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்றுள்ள அனைத்துகல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகள்கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள மாணவர்கள் 16ம் தேதி காலை 9 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அவர்களின் பெயர்களைபதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நேர்முக தேர்வில் டிசிஎஸ், அசெஞ்சர், ஐசிஐசிஐ வங்கி உள்பட 11நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
இந்த நிறுவனங்களுக்கு அரங்குகள் அமைக்க பல்கலைக்கழக கட்டிடத்தில் தனித் தனியாக அறைகள்ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 17ம் தேதி வேலைக்கானஉத்தரவு வழங்கப்படும் என ராமச்சந்திரன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications