உள்ளாட்சி வன்முறை-சட்டசபையில் அமளிஅதிமுக வெளியேற்றம்-சிபிஎம் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:உள்ளாட்சித் தேர்தல் வன்முறை குறித்துப் பேச தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகஎம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ஆவுடையப்பனுடன் கடும் வாக்குவாதம் புரிந்தனர். அனைவரையும் அவையிலிருந்துவெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதே காரணத்திற்காக தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதைக்கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

சட்டசபையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்துபேசினார்.

அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும். இதற்காக அவையின்பிற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார்.

இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி அளிக்க மறுத்தார். இதையடுத்து சபாநாயகருடன் ஜெயக்குமார்கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஜெயக்குமார் பேசியவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்கசபாநாயகர்உத்தரவிட்டார்.

உள்ளாட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக பேச தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும், சபையின் பிறஅலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என அனைத்து அதிமுக உறுப்பினர்களும் எழுந்து கோஷமிட்டனர்.இதனால் சபையில் அமளி நிலவியது.

ஒரு கட்டத்தில் கோபமடைந்த சபாநாயகர், அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்குஉத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

சட்டசபைக்கு வெளியே தங்களது வெளியேற்றம் குறித்து சட்டசபை அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், அனைத்து வாக்காளர்களின் வாக்குகளையும் திமுகவினரே பதிவு செய்த துர்பாக்கிய நிலைஉள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டது.

இதைக் கண்டிக்கிற வகையில், சபையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த அனுமதிகோரினோம். ஆனால், சபாநாயகர் அனுமதி தர மறுத்து விட்டார். மாறாக, ஒட்டுமொத்தமாக எங்களைவெளியேற்றி, சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டுள்ளார் என்றார்.

அதிமுக கொறடா செங்கோட்டையன் கூறுகையில், ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கவேண்டும் என்று நாங்கள் கோரியபோது அதை ஏற்றுக் கொள்ளாமல் இந்த சிறுபான்மை அரசும், சபாநாயகருஜனநாயக நெறிமுறைகளை குலைக்கும் வகையில், குரல் வளையை நெரிக்கும் வகையில் நடந்து கொண்டுஎங்களை வெளியேற்றி விட்டனர் என்றார்.

இதேபோல சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என மார்க்சிஸ்டம்கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் கோரினர். ஆனால் அவர்களுக்கு அனுமதி தர சபாநாயகர் மறுத்து விட்டார்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் சட்டசபைக்குவெளியே செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்தசாமி பேசுகையில், சென்னைமாநகராட்சித் தேர்தலில் நடந்த ரவுடித்தனத்தை கண்டித்தும், உள்ளாட்சித் தேர்தல் நடந்த பிற பகுதிகளில்நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் விவாதம் நடத்தக்கோரினோம். ஆனால் சபாநாயகர் அனுமதிக்க மறுத்து விட்டார் என்றார்.

அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக உறுப்பினர்களும்சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக உறுப்பினர்கள், சில அமைச்சர்கள் தெரிவித்தஅனைத்து கருத்துக்களும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+