பெண்ணிடம் சில்மிஷம்: மன்மதன் கைது
சென்னை:சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் செக்ஸ்சில்மிஷம் செய்த மருத்துவமனை ஊழியரான மதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
வேப்பேரி வி.வி. கோவில் தெருவில் தனியார் அறக்கட்டளை மருத்துவமனை உள்ளது. அங்கு ஏழைஎளியோருக்கு இலவச மருத்துவம் பார்க்கப்படுகிறது. இலவச மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்படுகின்றன.
இங்கு பர்வீன் என்ற 20 வயதுப் பெண் சிகிச்சை பெற வந்தார். இவரது கணவர் அக்பர் பாஷா, கறிக் கடைவைத்துள்ளார். பர்வீன் தலைவலிக்காக சிகிச்சை பெற வந்திருந்தார்.
அப்போது மருத்துவமனை ஊழியர் மதன் என்பவர் பர்வீனை பரிசோதித்தார். உங்களுக்கு மார்பில் சளி அதிகம்உள்ளது என்று கூறிய மதன், பர்வீனின் மார்பில் கை வைத்து அழுத்தியுள்ளார். இதனால் எரிச்சலுற்ற பர்வீன்கையை பட்டென்று தட்டியுள்ளார்.
இதையடுத்து கண்ணைப் பார்க்க வேண்டும் என்று கூறி ஒரு கருவியை எடுத்து அவரது கண்ணுக்கு நேராகவைத்துக் கொண்டு, தனது முகத்தை பர்வீனின் முகத்திற்கு படு நெருக்கமாக வைத்துக் கொண்டு கன்னத்தில்உரசியுள்ளார். மதனின் பரிசோதனையின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட பர்வீன் அவரைத் தள்ளி விட்டு விட்டுகூச்சல் போட்டபடி வெளியே வந்தார்.
தனது கணவரிடம் வந்து மதனின் சேஷ்டைகளைக் கூறியுள்ளார். இதையடுத்து பர்வீனை அழைத்துக் கொண்டுவேப்பேரி காவல் நிலையம் வந்த அக்பர் பாஷா மதன் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணைமேற்கொண்ட போலீஸார் மதனைப் பிடிக்க மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் அவர் ஓடி விட்டார்.
பின்னர் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று அங்கிருந்த மதனைக் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications