நுழைவுத் தேர்வு ரத்து-நீதிமன்ற மொழி தமிழ்
சென்னை:தமிழகத்தில் தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வகைசெய்யும் சட்ட மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோலஉயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை ஆக்கும் சட்ட மசோதாவும் ஒரு மனதாகநிறைவேற்றப்பட்டது.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுநடத்துவதை ரத்து செய்யலாம் என தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழு சமீபத்தில்அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து தொழில் படிப்புகளுக்கு நடத்தப்பட்டு வரும் நுழைவுத் தேர்வுமுறையை ரத்து செய்ய அரசு முடிவெடுத்தது. இதுதொடர்பான சட்ட மசோதாவைஉயர் கல்வி அமைச்சர் பொன்முடி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்தமசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை ஆக்கும் சட்டமதோவும் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதை முன்மொழிந்து முதல்வர்கருணாநிதி பேசுகையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள்அனைத்திலும் தமிழை நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
வழக்கு மொழியாக தமிழை அமல்படுத்துவதற்கு முன்பாக, மொழி பெயர்ப்பாளர்கள்,கூடுதல் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வசதிகள் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் எனஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எனக்கு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கோரிய அனைத்தும் நிச்சயம் செய்து தரப்படும்.
வழக்கு மொழியாக தமிழை செயல்முறைப்படுத்த இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரை இந்த சபை ஒருமனதாகவேண்டிக் கொள்கிறது என்றார். அதன் பின்னர் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம்ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக ஓமலூர் பாத்திமா மகளிர் மேல் நிலைப்பள்ளி மீது நடந்த வன்முறைத்தாக்குதல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கையில், ஓமலூர்பள்ளி சேதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications