மீன் வலையில் குண்டு-இலங்கையுடையதா?
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் குண்டு விடுதலைப் புலிகள் அல்லது இலங்கைராணுவத்திற்கு சொந்தமானதாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சூசை, சரண், குமரவேல், கர்ணன் ஆகிய மீன்வர்கள் மீன் பிடிக்க கடலுக்குள சென்றனர்.தலைமன்னார், தனுஷ்கோடி இடையே அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மீன் வலையை எடுக்க முயன்றபோது அதை இழுக்க முடியவில்லை. பெரிய மீனாக சிக்கியிருக்கக்கூடும் என நினைத்து சிரமப்பட்டு வலையை மேலே இழுத்தனர். ஆனால் மீனுக்குப் பதில் ஒரு பெரிய பெட்டிவலையில் சிக்கியிருந்தது தெரிய வந்தது.
அந்தப் பெட்டியை மேலே கொண்டு வந்து பார்த்தபோது அதில் வெடிபொருள் ஏதேனும் இருக்கலாம் எனஅஞ்சிய மீனவர்கள், அந்தப் பெட்டியை கரைக்குக் கொண்டு வந்து கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்படையினர் அந்தப் பெட்டியை முன்னெச்சரிக்கையுடன் திறந்து பார்த்தனர். உள்ளே ஒரு ராக்கெட் குண்டு,அதை பயன்படுத்தும் முறை, குண்டுக்கான சாவி உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது. குண்டின் எடை 17கிலோவாகும்.
இதுகுறித்து கடற்படை கமாண்டர் பர்மன் கூறுகையில், ராக்கெட் லாஞ்சரில் பொருத்து இலக்கை தாக்கக் கூடியகுண்டு, அதை பயன்படுத்தும் முறை குறித்த குறிப்பு, குண்டுக்கான சாவி ஆகியவை இருந்தன.
இந்த குண்டைப் பயன்படுத்தி 10,000 மீட்டர் தூரம் உள்ள இலக்கை குறி பார்த்து தாக்க முடியும். இந்தக் குண்டுஅடங்கிய பெட்டி நீண்ட நாளாக கடலுக்கடியில் கிடந்திருக்கிறது. இதனால் துருப்பிடித்து பாசி படர்ந்துகாணப்படுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளோம் என்றார்.
ராமேஸ்வரம் உளவுப் பிரிவு போலீஸார், கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட தமிழகபோலீஸாரும் இந்தக் குண்டை பார்த்து விசாரணை மேற்கொண்டனர். இந்தக் குண்டு இலங்கை கடற்படைஅல்லது விடுதலைப் புலிகளின் கடல் புலிகளுக்கு சொந்தமானதாக இருக்கக் கூடும் என அவர்கள் சந்தேகம்தெரிவித்துள்ளனர்.
மீன் வலையில் ராக்கெட் குண்டு சிக்கிய தகவல் பரவியதும் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மீனவர்களும்,பொதுமக்களும் குண்டைப் பார்க்க திரண்டனர். ஆனால் அவர்களை கடற்படையினர் அனுமதிக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications